புலி தாக்கி பசு உயிரிழப்பு: மக்கள் அச்சம்
7 May 2026, 2:05 am
<p><strong>புலி தாக்கி பசு உயிரிழப்பு: மக்கள் அச்சம்</strong></p><p>உதகை, மே 6- கூடலூர் அருகே புலி தாக்கி பசு உயிரிழந்த சம்பவத்தால், அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ள னர். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த தேவர்சோலை, எஸ்.எம்.காலனி பகுதியை சேர்ந்தவர் வாப் புட்டி. இவர் வளர்த்து வரும் பசு, சர்க் கார் மூலை குரும்பன் கொல்லி வயல் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது. வழக்கம் போல் மாலை மேய்ச்ச லுக்கு சென்ற பசுமாடு மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தே கமடைந்த வாப்புட்டி, பசுவை பார்க்க சென்றார். அப்போது அங்கு புலி தாக்கி கழுத்தில் காயத்துடன் பசுமாடு இறந்து கிடந்தது. அருகே புலியின் கால்தடம் பதிவாகி இருந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத் துக்கு வந்த வனத்துறையினர் பார் வையிட்டு விசாரித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, முறம் பிலாவு பகுதியில் புலி தாக்கி பசு ஒன்று இறந்த நிலையில், அதே பகுதியை ஒட்டிய சர்க்கார் மூலை பகுதியில் மீண்டும் புலி தாக்கி பசுமாடு இறந் துள்ள சம்பவம் அப்பகுதி மக்களி டையே அச்சத்தை ஏற்படுத்தியுள் ளது. தேவர் சோலை சுற்றுவட்ட பகுதி களில் கடந்த பல மாதங்களாக கால் நடைகளை தாக்கும் புலி ஒன்று நட மாடி வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்ட கால்நடைகள் புலி தாக்கி இறந்துள்ளன. கால்நடைகளை தாக்கும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், வனத்துறையினர் பல இடங்களில் கூண்டு வைத்தும் புலி கூண்டில் சிக்காமல் கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. பலியான கால்நடைகளுக்கு வனத்துறை இழப்பீடு வழங்கியபோதும், கால் நடை வளர்ப்போர் அச்சத்திலேயே தங்களது கால்நடைகளை வளர்க் கும் நிலை உருவாகியுள்ளது.</p>
