படுங்காயங்களுடன் உலாவிய புலி உயிரிழப்பு
6 Jan 2026, 4:23 pm
<p><strong>படுங்காயங்களுடன் உலாவிய புலி உயிரிழப்பு</strong></p>
<p>உதகை, ஜன.6- உதகை அருகே உள்ள போர்த்தியாடா தேயிலைத் தோட்டத்தில் படுங்காயங்களுடன் உலாவிய புலி, மூன்று நாட்களாக உணவு, சிகிச்சை இன்றி உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள போர்த்தி யாடா கிராமத்தில் தேயிலை தோட்டத்தில் கடந்த மூன்று நாட்க ளாக காலில் படுகாயங்களுடன் நடக்க முடியாமல் படுத்தி ருந்த புலியை வனத்துறையினர் ட்ரோன் கேமர மூலம் தீவிர மாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், திங்களன்று புலியை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தபோது எவ்வித அசைவும் இல்லாத தால், வனத்துறையினர் அருகில் சென்று பார்த்தபோது புலி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. முதற்கட்ட சோதனையில் இரு புலிகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் புலி படுகாயம் அடைந்த நிலை யில் உயிரிழந்திருப்பதாக மாவட்ட வன அலுவலர் கௌதம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் புலியின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே முழு விவரம் தெரிய வரும் என்றும், இரு புலிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டு காயமடைந்தால் சிகிச்சை அளிக் கவோ, உணவு அளிப்பதோ கூடாது என்றும், அதன் நடமாட் டத்தை கவனிக்க மட்டுமே தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய சட்டம் கூறியிருப்பதால் அதை நாங்கள் கடை பிடிப் பதாக மாவட்ட வன அலுவலர் கௌதம் தெரிவித்தார். இருப்பினும் கடந்த மூன்று நாட்களாக படுகாயம் அடைந்து நிலையில் இருந்த புலிக்கு உணவோ, சிகிச்சையோ அளித்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும் என்று வன உயிரின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
