முந்தய பக்கம்

சாலையை கடந்து சென்ற புலி!

20 May 2026, 12:04 am
சாலையை கடந்து சென்ற புலி!
<p><strong>சாலையை கடந்து சென்ற புலி!</strong></p><p>உதகை, மே 19- முதுமலை அருகே வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த புலி, மாயார் சாலையை கடந்து சென்றதை சுற்றுலாப் பயணி கள் கண்டு ரசித்தனர். முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குட்பட்ட மாயார் சாலையில் நாள்தோறும் வனவிலங்குகளை காண சுற்றுலாப் பயணிகள் சவாரி செல்கின்றனர். சமீப நாட்களாக இந்த மாயார் செல்லக்கூடிய சாலையில், புலிகள் நடமாட்டம் அதிக மாக காணப்படுகிறது. வனப்பகுதியிலிருந்து சாலையை கடந்து நீர்நிலைகளுக்கு செல்லும் புலிகளை பார்த்து சுற்றுலாப் பயணிகள் வியப்படைந்து வருகின்றனர். இதனி டையே, மழையின் காரணமாக வனப்பகுதிகள் அனைத்தும் பசுமையாக காட்சியளிப்பதால் யானை, புலி, கரடி, சிறுத்தை, மான் கூட்டங்கள் என வனவிலங்குகள் மாயார் சாலையில் உலா வருகின்றன. இந்நிலையில், திங்களன்று சுற்றுலாப் பய ணிகள் செல்லும் போது மான்கள் சத்தத்தை கேட்டு, சாலையி லேயே வாகனங்களை நிறுத்திக் கொண்டனர். அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலி ஒன்று, சாலையை கடந்து சென்றது. இதனை வாகனத்திலிருந்த சுற்றுலாப் பயணிகள் செல்போனில் வீடியோ பதிவு செய்து, சமூக வலை தளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைர லாகி வருகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram