தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவையில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

28 Jan 2026, 2:33 pm
கோவையில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
<p><strong>கோவையில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்</strong></p> <p>மேட்டுப்பாளையம், ஜன.28- கோவை மாவட்டத்திற்குட்பட்ட 7 &nbsp;வனச்சரகங்களில் புலிகள் கணக் கெடுப்புப் பணி தொடங்கியது. கோவை மாவட்டத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம், காரமடை, &nbsp;சிறுமுகை, பெரியநாயக்கன்பாளை யம், கோவை, மதுக்கரை மற்றும் &nbsp;போளுவாம்பட்டி ஆகிய ஏழு வனச் சரகங்களில் புலிகள் கணக்கெடுக் கும் பணி புதனன்று முதல் முறை யாக தொடங்கியது. மொத்தம் ஏழு &nbsp;நாட்கள் நடைபெறவுள்ள இந்த முக்கி யப் பணியில் வனத்துறையினர் மற் றும் வனவிலங்கு ஆர்வலர்கள் ஆர் வத்துடன் ஈடுபட்டுள்ளனர். ஒரு வார &nbsp;கால கணக்கெடுப்பின் முடிவில் சேகரிக்கப்படும் பல்வேறு மாதிரி களைக் கொண்டு, அந்தந்த வனச்சர கங்களில் உள்ள புலிகளின் எண் ணிக்கை குறித்த விவரங்கள் இறுதி &nbsp;செய்யப்படும். இந்த கணக்கெடுப்பு பணிக்காக &nbsp;மொத்தம் ஏழு பிரிவுகள் உருவாக்கப் பட்டு, ஒவ்வொரு குழுவிலும் ஒரு வன வர், ஒரு வனக்காப்பாளர், ஒரு வனக் காவலர் மற்றும் வனவிலங்கு ஆர்வ லர்கள் என மூன்று முதல் ஐந்து &nbsp;பேர் இடம்பெற்றுள்ளனர். மேட்டுப் பாளையத்தில் நடைபெறும் கணக் கெடுப்புப் பணியில் வட மாநிலங் களை சேர்ந்த பயிற்சி வனச்சரக அலுவலர்களும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கணக்கெடுப்பின் முதல் மூன்று நாட்களில் யானைகளின் சாணம், வனவிலங்குகளின் கால் தடங்கள் மற்றும் எச்சங்கள் ஆகியவை சேகரிக்கப்பட உள்ளன. இதற்காக &nbsp;வனத்துறையினர் அதிகாலையி லேயே சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் கால்நடையாக சென்று விலங்குகளின் நடமாட்டம் மற்றும் தாவர வகைகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து நான்காம் நாள் முதல் எட்டாம் நாள் வரை நேர்கோட்டுப் பாதையில் கணக்கெடுப்புப்பணிகள் நடைபெறும். இறுதிக்கட்ட பணியின் போது வனப்பகுதியிலுள்ள நீர் நிலைகள், குளம் மற்றும் குட்டைகள் தீவிர மாகக் கண்காணிக்கப்படும். நீர் &nbsp;நிலைகளில் மறைவாக அமர்ந்து, &nbsp;தாகம் தீர்க்க வரும் வனவிலங்கு களை நேரடியாக கண்டு, அவை தாவர உண்ணிகளா அல்லது ஊன் உண்ணிகளா என வகைப்படுத்தி கணக்கெடுக்கப்படும். இதில் நேரடி யாக தென்படும் மான்கள், யானை கள், காட்டெருமைகள், சிறுத்தை கள் மற்றும் புலிகள் குறித்த தரவுகள் &nbsp;சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படை யில் ஒவ்வொரு வனச்சரகத்திலும் உள்ள புலிகளின் தோராயமான எண் ணிக்கை கணக்கிடப்படும் என வனத் துறை தெரிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.