தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழர்களின் கனவில் இடி: கோவை - மதுரை மெட்ரோ நிராகரிப்பு

18 Nov 2025, 3:21 pm
தமிழர்களின் கனவில் இடி: கோவை - மதுரை மெட்ரோ நிராகரிப்பு
<p><strong>தமிழர்களின் கனவில் இடி: கோவை - மதுரை மெட்ரோ நிராகரிப்பு</strong></p> <p>தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று &nbsp;அழைக்கப்படும் கோவை, தொழில், கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் முன்னணி வகிக்கும் நகரமாகும். இந்தியா வில் தங்க நகை உற்பத்தியில் இரண்டாவது பெரிய நகரமாகவும், ஐ.டி. நிறுவனங்கள் அதிகம் உள்ள நகரமாகவும் திகழ்கிறது. சுமார் 1 லட்சம் தொழில் கூடங்கள் உள்ள &nbsp;இங்கு, மாநகர் பகுதியில் மட்டும் 5 லட்சத் துக்கும் மேற்பட்ட பிற மாவட்ட, மாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய &nbsp;அரசு அனுமதி மறுத்திருப்பது தமிழக அரசி யல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகரில் 34.8 கிலோ மீட்டர் தொலைவிற்கு, 32 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோவையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் வழிப்பா தைகள், நிலம் கையகப்படுத்துவது போன்ற &nbsp;விரிவான திட்ட பணிகளை மேற்கொண்டனர். மேலும் இந்த அறிக்கையை ஒன்றிய அரசி டம் ஒப்படைத்தனர். &nbsp;&lsquo;20 லட்சம் மக்கள் தொகை இல்லை&rsquo; என்ற காரணத்தைக் காட்டி, மிக முக்கியமான இத்திட்டத்தை நிராகரித்திருப்பது, தமிழ்நாட்டின் வளர்ச் சிக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுவதாக அரசியல் கட்சித் தலைவர்களும், தொழில் முனைவோரும், பொதுமக்களும் கடுமை யாகக் கண்டித்துள்ளனர். தமிழகத்திற்கு துரோகம் சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் கூறுகையில், ஒன்றிய அரசின் &nbsp;இந்த முடிவு &ldquo;தமிழக மக்களுக்கு இழைக் கப்படும் மிகப்பெரிய துரோகம்&rdquo;. &ldquo;&lsquo;செகண்ட் டயர் சிட்டி, தேர்ட் டயர் சிட்டி&rsquo; என்று பிரிக்கும் போது கோவை, மதுரை போன்ற நக ரங்கள் அந்தப் பட்டியலில் இடம்பெறக் கூடியவை. கோவை-திருப்பூர் பகுதியை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, சுமார் 50-60 லட்சம் மக்கள் வாழும் இந்தப் பெரு நகரத்திற்கு மெட்ரோ சேவை அவசியமானது மட்டுமல்ல அத்தியாவசியமானது. இது ஒரு தொழில்நுட்பக் காரணம் அல்ல, மாறாக தேர்தலை மனதில் வைத்து கொண்டு, தமிழ் நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் மோடி அரசின் தொடர் இழிசெயல். கடந்த 11 ஆண்டு கள் மோடி ஆட்சியில், தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களைப் பழிவாங்கும் முறையில் நடத்தி வருகிறார்கள். கோவையில் ரயில்வே &nbsp;திட்டப் பணிகள் உட்பட அனைத்தும் ஒப்பு தல் இல்லாமல் தேங்கி நிற்கின்றன. இப் போது மெட்ரோவுக்கும் இதே நிலை. தேர்தல் நேரங்களில் பா.ஜ.க.வினர் &lsquo;நாங்கள்தான் கோவைக்கு மெட்ரோ கொண்டு வந்தோம்&rsquo; என்று பொய் சொல்லி ஓட்டு வாங்குகிறார் கள். மதுரை எய்ம்ஸ் போலவே எதுவும் செய்யாமல், வாக்குறுதிகளைப் பயன்படுத்தி மட்டும் ஏமாற்றுகிறார்கள். ஒன்றிய அரசின் இந்த வஞ்சக போக்கை கோவை மக்கள் ஏற்க மாட்டார்கள், என்றார். வட இந்திய நகரங்களுக்கு ஒரு நீதி, தமிழகத்துக்கு அநீதி கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கூறுகையில், &ldquo;கோவை மக்களைத் தொடர்ந்து வஞ்சிக்கும் &nbsp;பா.ஜ.க. அரசின் அடுத்த அடிதான் இந்த மெட்ரோ அனுமதி மறுப்பு. பிரதமர் கோவை &nbsp;வரும் நேரத்திலேயே இப்படி ஒரு இடி &nbsp;விழுந்தாற்போல் செய்தியை வெளியிட்டி ருப்பது நியாயமே அல்ல. வேகமாக வளர்ந்து வரும் கோவை நகரத்திற்கு மெட்ரோ ரயில் மிக மிக அவசியம் என்பது அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கையும் ஆசையும். வட இந்தியாவில் கோவையைவிட சிறிய நகரங்களான இந்தூர், பூனே, சூரத், கான்பூர், ஆக்ரா போன்ற இடங்களுக்கு எல்லாம் மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்து நிதியும் ஒதுக்குகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் தொடர்ந்து வஞ்சனைதான். வாய் கிழிய தேன் ஒழுகப் பேசுவார்கள்; காரியத்தில் புறக்கணிப்பு தான். &nbsp;எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அதிமுக அரசின் முதல் &nbsp;சட்டமன்றத் தீர்மானமாகவே &lsquo;கோவைக்கு மெட்ரோ ரயில் வேண்டும்&rsquo; என்று நிறைவேற்றி னார்கள். இது பற்றி பிரதமரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி பேசுவாரா?. ஒன்றிய அரசு உடனடியாக இந்த முடிவை மறுபரி சீலனை செய்ய வேண்டும். கோவை-மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு உடனடி அனுமதி யும், மத்திய நிதி உதவியும் வழங்க வேண்டும். &lsquo;கோ பேக் மோடி&rsquo; என்று மக்கள் கோஷமிட இதைவிட வலுவான காரணம் வேறு எதுவும் தேவையில்லை&rdquo; என்று கடுமை யான கண்டனத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஒற்றுமை தேவை&nbsp;&nbsp; &nbsp; தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறுகையில், &ldquo;தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்களை மத்தியில் ஆளும் மோடி அரசு தொடர்ச்சி யாக இழுத்தடித்து, தள்ளிப்போட்டு, இறுதி யில் ரத்து செய்து வருகிறது. அதில் ஒன்று தான் கோவை மெட்ரோ ரயில் திட்டம். இத் திட்டத்துக்கு மாநில அரசு தனது பங்கு &nbsp;நிதியை முழுமையாக ஒதுக்கத் தயாராக &nbsp;இருந்தது. நிலம் கையகப்படுத்துதல் உள் ளிட்ட அனைத்து முன்னெடுப்புகளையும் உடனடியாக செயல்படுத்த மாநில அரசு தயாராக இருந்த நிலையில், &lsquo;மக்கள் தொகை 20 லட்சத்துக்குக் குறைவு&rsquo; என்ற ஒரே கார ணத்தைக் காட்டி ஒன்றி அரசு இத்திட்டத்தை நிராகரித்துள்ளது. &lsquo;20 லட்சம் மக்கள் தொகை&rsquo; என்ற &nbsp;காரணம் உண்மையானது அல்ல; &nbsp;தமிழ்நாட்டைத் திட்டமிட்டே புறக்கணிப்ப தற்காகக் கூறப்படும் போலிக் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது. கோவை இன்று வேகமாக வளர்ந்து வரும் மாநகரம். ஏற்கெனவே 100 வார்டுகளைக் கொண்ட பெருநகராட்சியாக உள்ளது. அருகில் உள்ள பல பஞ்சாயத்துகள், நக ராட்சிகள் இணைக்கப்பட்டு மக்கள் தொகை &nbsp;மேலும் பல லட்சங்களாக உயர்ந்துள்ளது. கண்கூடாகத் தெரியும் இந்த உண்மையை மறைத்து, மக்கள் தொகை கணக்கெடுப் பையே நடத்தாமல் பழைய தரவைக் காட்டி &nbsp;தமிழ்நாட்டை ஒன்றிய அரசு ஏமாற்றி வரு கிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் கோவையில் வந்து நின்று கொண்டு &lsquo;ராணுவத் தளவாட உற்பத்தி மையம், பெரிய பெரிய திட்டங்கள்&rsquo; என்று பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வர்த்த கர் சங்க நிகழ்ச்சிகளில் பேசிச் செல்வார்கள். ஆனால் அவர்கள் கூறிய ஒரு வாக்குறுதிகூட இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டை தொடர்ச்சியாகப் புறக்கணித்து &nbsp;வரும் மோடி அரசின் இந்த அணுகுமுறை வெளிப்படையான இனவெறுப்பு, மாநில வெறுப்பு கொண்டது. இதை தமிழக மக்கள் உணர்ந்து ஒருமித்து எதிர்க்க வேண்டும்&rdquo; என்றார். வளர்ச்சியை முடக்குவதா? தமிழ்நாடு சிறுகுறு தொழில்முனைவோர் சங்கத் தலைவர் ஜேம்ஸ் அவர்கள் பேசு கையில், &ldquo;கோவை மக்களின் கடின உழைப் பால் உலக நாடுகளில் இருந்து ஏராளமா னோர் வந்து செல்லும் தொழில் நகரமாக கோவை மாறியுள்ளது. இங்குள்ள மக்க ளுக்கு செய்யப்படும் துரோகம் இது. வளர்ந்து &nbsp;வரும் நகரில் வளர்ச்சிக்கான திட்டங்களைக் &nbsp;கொண்டு வராமல், அவர்களின் உரிமை களை பறிக்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபடு கிறது&rdquo; என்று வேதனை தெரிவித்தார். போத்தனூர் ரயில் பயணிகள் சங்க நிர்வாகி சுப்பிரமணியன், கோவை மற்றும் மதுரை இரண்டுமே தமிழகத்தின் வளர்ந்த பெரிய நகரங்கள் என்றும், இங்கு சாலைப் போக்குவரத்து நெரிசல் மிகுந்திருப்பதால், மெட்ரோ ரயில் சேவை கட்டாயமாகத் தேவை என்றும் வலியுறுத்தினார். ஐ.டி. நிறுவன ஊழியர் மணிகண்டன் அவர்கள், சென்னை, பெங்களூர் போன்ற ஐ.டி. நகரங்களைப் போலவே கோவையிலும் மெட்ரோ அத்தியாவசியமானது. பேருந்து கள் எப்போதுமே அதிக கூட்டமாக இருப்பதா லும், அதிகளவும் கார், இரு சக்கர வாகனங் கள் இயக்கப்படுவதாலும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் மாநகரம் சிக்கி தவிக்கிறது. இதனால், சூழலியல் கேடும் ஏற்படும். மெட்ரோ சேவை வரும்போது மட் டுமே போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முடியும். இந்த நிராகரிப்புச் செய்தி மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்தார். &nbsp;அரசியல் கட்சித் தலைவர்கள், தொழில் முனைவோர், மற்றும் பொதுமக்களின் &nbsp;கடும் கண்டனங்களுக்குப் பிறகு, ஒன்றிய அரசு உடனடியாக இந்த முடிவை மறுபரி சீலனை செய்து, கோவை மற்றும் மதுரை &nbsp;மெட்ரோ திட்டங்களுக்கு உடனடி அனுமதி யும் மத்திய நிதி உதவியும் வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக் கையாக உள்ளது. இல்லையெனில், மோடி &nbsp;அரசின் தமிழ்நாடு புறக்கணிப்புக்கு வரும் நாட்களில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று அரசியல் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொகுப்பு: கார்த்திக் மதிவாணன், கவி</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.