போகலூர், சாயல்குடியில் துளிர் வினாடி - வினா
7 Oct 2026, 8:54 pm

போகலூர், சாயல்குடியில் துளிர் வினாடி - வினா

இராமநாதபுரம், அக்.7-தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் போகலூர் வட் டார கிளை சார்பாக பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைஊக்குவிக்கும் விதமாக துளிர் வினாடி வினா போட்டி போகலூர் வட்டார வளமைத்தில் அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் கு.காந்தி தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் கோ.குமரேசன் வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவ -மாணவியருக்கு போகலூர் வட்டாரக் கல்வி அலுவலர் வளர்மதி பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

வெற்றி பெற்ற மாணவ - மாணவியரை மஞ்சூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் ருக்குமணி, ஆசிரியர் பயிற்றுநர் பாலமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

சாயல்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் டி.நவநீதகிருஷ்ணன் வரவேற்றார். வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக் கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கே.கவிதா, எம்.குருசாமி, ஆர்.சுபாஷ், ஆர்.மலர் கொடி, எஸ்.ஈஸ்வரி, பி.ஜோதி ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் முதலிடம் பிடித்த மாணவர்கள் இராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.