துளசி மகளிர் சட்டக் கல்லூரி மாணவிகள் 5-வது நாளாக தொடர் போராட்டம்கல்வி - எதிர்காலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
8 Aug 2026, 11:05 pm

துளசி மகளிர் சட்டக் கல்லூரி மாணவிகள் 5-வது நாளாக தொடர் போராட்டம்கல்வி - எதிர்காலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி, ஆக. 8-தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள துளசி மகளிர் தனியார் சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவிகள்தங்களது கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம் சனிக்கிழமையன்று 5-வது நாளாக நீடித்தது.கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் தங்களது கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி மாணவிகள் இந்தப் போராட்டத்தில்ஈடுபட்டு வருகின்றனர். அரசு மற்றும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவி ஒருவர் கூறுகையில், “நாங்கள் ஐந்தாவது நாளாக தொடர்ந்து உள்ளிருப்புபோராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளோம். இரவு பகலாக கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து போராடி வருகிறோம்.எங்களுடைய கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய முக்கிய கோரிக்கை. கல்லூரியின் அங்கீகாரம் தொடர்பான பிரச்சனையால் எங்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அரசு மற்றும் பல்கலைக்கழகம் உடனடியாக தலையிட்டு எங்களது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

போராட்டத்தை கைவிடுமாறு பல்வேறு வழிகளில் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக உணர்கிறோம். மாணவிகளின் புகைப்படங்கள் எடுக்கப்படுவது, பெற்றோர்களிடம் தெரிவிப்பது போன்ற நடவடிக்கைகளால் மாணவிகள் அச்சமடைகின்றனர்.

இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. மின்விளக்குகள் அணைக்கப்படுவதால் மேலும் அச்சம் ஏற்படுகிறது. மாணவிகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.எங்களுடைய கல்வி பாதிக்காத வகையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை எங்களதுபோராட்டத்தை தொடருவோம்” என்றார்.

அரசு தலையிட கோரிக்கைதொடர்ந்து 5-வது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும்சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகள் உடனடியாக மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.

துளசி மகளிர் சட்ட கல்லூரியில் கூடுதல் மாணவிகள் சேர்க்கை மற்றும் அங்கீகாரம் ரத்து செய்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில் மாணவர் சங்க மாவட்ட தலைவர் மாடசாமி மற்றும்மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றி மற்றும் மேனகா ஆகியோர் கலந்து கொண்டனர்.