தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டிஜிட்டல் யுகத்தின் நினைவுகளைப் பேசும் புதிய முயற்சி!

8 Jun 2026, 11:22 pm
டிஜிட்டல் யுகத்தின் நினைவுகளைப் பேசும் புதிய முயற்சி!
<p><strong>டிஜிட்டல் யுகத்தின் நினைவுகளைப் பேசும் புதிய முயற்சி!</strong></p><p>சென்னை, ஜூன் 8- சென்னையின் முன்னணி கலைக் கூடமான ‘அஷ்விதாஸ்’ , தங்களது புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள அதி நவீன ‘ஒயிட் கியூப்’ கேலரி வளாகத் தில், உலகப் புகழ்பெற்ற ஓவியர்க ளான துக்ரல் மற்றும் தக்ராவின் புதிய படைப்புகளை உள்ளடக்கிய ‘மைமீசிஸ்’ என்ற ஓவியக் கண்காட் சியை நடத்துகிறது. மரம், மனித நினைவுகள் மற்றும் வாழும் ஆவணக்காப்பகம் ஆகிய வற்றைப் பற்றிப் பேசும் இவர்களது தொடர் படைப்பான ‘அர்போரேட்டம்’ என்பதன் தொடர்ச்சியாகவும் நீட்சி யாகவும் இந்த ‘மைமீசிஸ்’ உருவெடுத் துள்ளது. இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளில் இருந்து டிஜிட்டல் தளங்களை நோக்கி நகரும் மனித வாழ்வியல், எவ்வாறெல்லாம் பிக்சல் களாகவும் தரவுப் படிவங்களாகவும் மாற்றமடைகின்றன என்பதை இக்கண் காட்சி ஆராய்கிறது. அதிவேகமாக இயங்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத் தரவுகளை, ஓவியக் கலையின் நிதானம் மற்றும் தொட்டுணரக்கூடிய தன்மை யின் மூலம் கேன்வாஸ் ஓவியங்களாக இவர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். தங்களது இந்த புதிய படைப்பு குறித்து ஓவியர்கள் துக்ரல் மற்றும் தக்ரா கூறுகையில், மனிதர்கள் வாழ்ந்த ஒவ்வொரு கணத்தையும் பிரதிபலிக் கும் எல்லையற்ற அலகுகளைக் கற்பனை செய்ய விரும்புவதாகவும், தங்களுக்குக் காலம், தரவு, சூழல் ஆகியவை உலகைப் பார்க்கும் புதிய வழிகளாக மாறியுள்ளன என்றும் தெரிவித்தனர். இன்று மனித வாழ்க்கை யின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் அனுபவங்கள் அல்காரிதம் மூலம் ஆவணப்படுத்தப்படும் சூழலில், தரவு களால் கட்டமைக்கப்பட்ட உலகில் வாழ்வதன் அர்த்தம் என்ன என்பதை யும், குறியீட்டு முறைகளால் மனித உணர்வுகளைத் தக்கவைக்க முடியுமா என்பதையும் இந்த ‘மைமீசிஸ்’ ஓவி யங்கள் பார்வையாளர்களிடம் கேள்வி யாக எழுப்புகின்றன. கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்க ப்பட்ட இந்த ‘மைமீசிஸ்’ படைப்பு களின் சில பகுதிகள் ஏற்கனவே புது தில்லியின் நேச்சர் மார்ட்டே, சவன்னாவின் எஸ்சிஏடி கலை அருங் காட்சியகம், ஜெய்ப்பூர் கலை மையம் மற்றும் மும்பையின் கமல்நயன் பஜாஜ் கலைக்கூடம் ஆகியவற்றில் காட்சிப் படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது. சென்னையில் முதன்முறை யாக விரிவான வடிவில் அரங்கேறும் இக்கண்காட்சியுடன் சேர்த்து, சிராக் தக்கரின் கட்டுரை அடங்கிய சிறப்புச் செய்திமடலும் வெளியிடப்பட உள்ளது. இக்கண்காட்சியைக் காண விரும்பு பவர்கள் முன்அனுமதி பெறுவது கட்டா யமாக்கப்பட்டுள்ளது. கண்காட்சியைப் பார்வையிட விரும்புவோர் +91 98400 94412 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களது வருகையைத் திட்டமிடலாம். கலைப்படைப்புகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு www. ashvitas.com என்ற இணைய தளத்தை பார்வையிடலாம்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.