முந்தய பக்கம்

புதிய அமைச்சரை சந்தித்து துடிசியா கோரிக்கை மனு

29 May 2026, 11:03 pm
புதிய அமைச்சரை சந்தித்து துடிசியா கோரிக்கை மனு
<p><strong>புதிய அமைச்சரை சந்தித்து துடிசியா கோரிக்கை மனு</strong></p><p>தூத்துக்குடி, மே 29 தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில் சங்கமான துடி சியா (THUDITSSIA) நிர்வாகி கள், அண்மையில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்கள் (MSME) துறை அமைச்சராக பொறுப்பேற்ற .பி. மதன்ராஜ் அவர்களை தூத்துக்குடி சுற்றுலா மாளி கையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் களின் வளர்ச்சி மற்றும் தொழில் கட்டமைப்பு மேம் பாட்டிற்கான பல்வேறு கோரிக் கைகள் அடங்கிய விரிவான மனுவை துடிசியா பொதுச் செயலாளர் ஜெ. ராஜ் செல்வின் அமைச்சரிடம் வழங்கினார். அந்த மனுவில் துடிசியா விற்கு 10 ஏக்கர் நிலம் வழங்கி நிரந்தர MSME வர்த்தக மையம் அமைத்தல், சிப்காட் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டைகளில் செயல்படும் MSME நிறுவ னங்களுக்கு காலி நில வரி விலக்கு, சிறு தொழில்களுக் கென தனி சிப்காட் தொழிற் பேட்டை அமைத்தல், உள்ளூர் MSME நிறுவனங் களுக்கு பெரிய தொழிற்சா லைகளின் கொள்முதலில் முன் னுரிமை வழங்குதல், திறன் மேம்பாட்டு பயிற்சி நிறு வனம் அமைத்தல், மின்சார கட்டண சலுகைகள், LTCT மின்சார சுமை வரம்பு உயர்த்துதல், ESI மற்றும் EPF மண்டல அலுவலகங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன. இச்சந்திப்பில் துடிசியா தலைவர் எஸ்கே எஸ் சிஎன் தர்மராஜ், பொதுச் செயலா ளர் ஜெ. ராஜ் செல்வின் மற்றும் நிர்வாகக் குழு உறுப் பினர்கள் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram