தக்கலையில் நாளை மாற்றுத்திறனாளி குறைதீர் முகாம்
27 Oct 2026, 8:54 pm

தக்கலையில் நாளை மாற்றுத்திறனாளி குறைதீர் முகாம்

நாகர்கோவில், அக்.27-கன்னியாகுமரி மாவட்டம், பத்மனாபபுரம் வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளின் குறை தீர்க்கும் முகாம்பத்மனாபபுரம் சார் ஆட்சியர் தலைமையில் 29.10.2026 வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு பத்மனாபபுரம் சார் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர்வட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் எல்.எம்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட சிஎஸ்ஐ கூட்டு மேலாண்மை பள்ளிகளின் கூட்டு மேலாளர் மற்றும் பள்ளித் தாளாளர் சுபானந்தராஜ் திறந்து வைத்து, மாணவர்களின் அறிவியல் படைப்புகளைப் பார்வையிட்டார். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்களது அறிவியல் அறிவு, புதுமையான சிந்தனை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு அறிவியல் மாதிரிகளையும் படைப்புகளையும் காட்சிப்படுத்தினர்.