சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் கன்னடர்களே! அமைச்சர் ராமலிங்க ரெட்டி பேட்டி
18 Aug 2026, 9:02 pm
<p><strong>சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் கன்னடர்களே! அமைச்சர் ராமலிங்க ரெட்டி பேட்டி</strong></p><p>பெங்களூரு, ஆக. 18 -“கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் கர்நாடகாவில் வாழும் கன்னடர்களே!” என்று அம்மாநில அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். “சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தமிழர்களாகவோ, வேறு எந்தச் சாதியை, மதத்தைச் சார்ந்தவர்களாகவோ இருக்கலாம். அவர்கள் அனைவரும் எங்கள் கன்னடர்கள். பல பத்தாண்டுகளாக அவர்கள் கர்நாடகத்தில்தான் வசித்து வந்தார்கள். எங்கள் விவகாரத்தில் ஏன் மற்றவர்கள் தலையிட வேண்டும்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
