முந்தய பக்கம்

யானைக் கூட்டம் மிதித்ததில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

5 Feb 2026, 3:40 pm
யானைக் கூட்டம் மிதித்ததில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
<p><strong>யானைக் கூட்டம் மிதித்ததில் &nbsp;ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு</strong></p> <p>ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மலை மற்றும் வனப்பகுதி கொண்டதாகும். இந்த பொகாரோ நகருக்கு அருகே மஹுவதா னர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்கிபுன்னு கிராமத்தில் வியாழக்கிழமை அதிகாலை 3 &nbsp;மணியளவில், 5 யானை கள் கொண்ட கூட்டம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை மிதித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கோரச் சம்பவம் தொடர்பாக மஹுவதானர் வனத்துறை அதிகாரி சந்தீப் சிண்டே கூறுகையில்,&ldquo;நெல்லைத் தின்பதற்காக யானைக்கூட்டம் வீட்டைத் தாக்கி, வீட்டின் ஒரு பகுதியைச் சேதப் படுத்தியுள்ளது. அப்போது வீட்டிலிருந்த மூவரும் உயிர் பிழைக்க வெளியே ஓட முயன்றனர். ஆனால் வீட்டின் வெளியே யானைகளால் 3 பேரும் மிதித்துக் கொல் லப்பட்டனர்&rdquo; என அவர் கூறினார். பர்கிபுன்னு கிராமம் மிகச் சிறியது என்ற நிலையில், யானைக் கூட்டத்தால் அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram