தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பதுக்கல் பட்டாசு வெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு

2 Oct 2026, 1:25 am
பதுக்கல் பட்டாசு வெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு

பதுக்கல் பட்டாசு வெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு

நாமக்கல், அக்.1 –பரமத்தி வேலூர் அருகே வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில், தம்பதியினர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம் மைனர் வீரப்பன் பிள்ளை நகரை சேர்ந்த ராஜசேகரன் (50) என்பவர் பட்டாசு வியாபாரம் செய்து வந்தார். இவர் வீட்டின் மேல்மாடியில் திருவிழாக்களுக்கான நாட்டுவெடி மற்றும் வாணவெடிகளை சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்தார்.இந்நிலையில் புதனன்று, எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் மேல்மாடி கட்டிடம் முற்றிலும் தரைமட்டமானது. அருகில் இருந்த வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின.

இவ்விபத்தில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி ராஜசேகரன், அவரது மனைவி சத்யா (45) மற்றும் பணிப்பெண் பொன்மலர் (42) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த நாமக்கல், வேலாயுதபாளையம் தீயணைப்பு துறையினரும் போலீசாரும் மின்சாரத்தை துண்டித்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.ராட்சத கிரேன் மற்றும் மின்விளக்குகள் உதவியுடன் சுமார் 8 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகே 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காகப் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், மாவட்டம் முழுவதும் சட்டவிரோதப் பட்டாசு பதுக்கலை தடுக்க வருவாய்த் துறையும் காவல்துறையும் தீவிர ஆய்வு நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.