இந்தியக் கடல்சார் ஊழியர்கள் 3 பேர் உயிர் பறிப்பு மோடி அரசு கள்ள மவுனம் சிபிஎம் கடும் கண்டனம்
12 Jun 2026, 9:09 pm

இந்தியக் கடல்சார் ஊழியர்கள் 3 பேர் உயிர் பறிப்பு மோடி அரசு கள்ள மவுனம்

சிபிஎம் கடும் கண்டனம்

புதுதில்லி, ஜூன் 12– வளைகுடாப் பகுதியில் ‘எம்.டி. செட்டபெல்லோ’ (MT Settebello) என்ற எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டிருப்ப தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பால் நேர்ந்த துயரம்

மேற்கு ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் மேற்கொள்ளப் படும் பொறுப்பற்ற மற்றும் ஆக்கிர மிப்பு இராணுவத் தலையீடுகளின் மற்றுமொரு விளைவே இந்தத் துயரச் சம்பவமாகும். இத்தகைய அப்பட்டமான தலையீடுகள் இப்பகு தியைத் தொடர்ந்து சீர்குலைத்து, சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்த லாகவும், அப்பாவி பொதுமக்கள் மற்றும் உழைக்கும் தொழிலாளர் களின் உயிருக்கு ஆபத்தாகவும் முடிந்துவிடுகின்றன.

உயிரிழந்த இந்திய மாலுமி களான ஆதித்யா சர்மா, சிவானந்த் சௌராசியா மற்றும் பட்டனாலா சுரேஷ் ஆகியோர், தங்களின் தொழில்முறை கடமைகளைச் செய்து கொண்டிருந்த சாமானிய பொதுமக்கள் ஆவர். அவர்கள் போரிடும் படையினர் அல்லர்; எந்தவொரு இராணுவ அல்லது புவிசார் அரசியல் மோதலிலும் அவர் களுக்கு எவ்விதப் பங்கும்கிடையாது.

மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்க லைத் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன், இராணுவ சாகசங்கள் மற்றும் புவிசார் அரசியல் அதிகாரப் போராட்டங்கள் பெருகிவரும் தற்போதைய சூழலில், அதற்குப் பலியாகும் உலகெங்கிலும் உள்ள மாலுமிகள் மற்றும் கடல்சார் தொழிலாளர்களுடன் தனது உறுதியான ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் வெளிப்படுத்துகிறது.

கப்பல் போக்குவரத்தில் வளரும் பாதுகாப்பின்மை

இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) ஒரு அங்க மான ‘இந்திய ஃபார்வர்டு சீமேன் யூனியன்’ (Forward Seamen’s Union of India) அமைப்பின் தகவல்களின்படி, ஏராளமான இந்திய மாலுமிகளை ஏற்றிச் சென்ற எம்.டி. செட்டபெல்லோ கப்பல், ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இப்பகுதியில் இயங்கும் வர்த்தகக் கப்பல்கள் சம்பந்தப்பட்ட பிற சம்ப வங்களைத் தொடர்ந்து இந்தத் கொடூரத் தாக்குதல் நடைபெற்றுள் ளது. மேலும், இது பொதுமக்கள் பயன்படுத்தும் கப்பல் போக்கு வரத்து எதிர்கொண்டு வரும் அதி கரிக்கும் பாதுகாப்பின்மையை அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது.

ஒன்றிய அரசின் வெட்கக்கேடான மௌனம்

இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களைத் தெளிவாக அடையாளம் கண்டு கண்டிக்க மறுப்பதையும், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் வெட்கக்கேடான மௌனத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்திய அரசு இந்தத் தாக்குதலை எவ்வித நிபந்தனை யுமின்றி உடனடியாகக் கண்டிக்க வேண்டும் என்றும், இந்தியக் குடிமக்களின் மரணங்களுக்குக் காரணமானவர்களிடம் உரிய பொறுப்புக்கூறலைக் கோர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது.

மேலும், மோதல் அபாயம் உள்ள பதற்றமான பகுதிகளில் பணிபுரி யும் இந்திய மாலுமிகளின் பாது காப்பை உறுதி செய்யத் தேவை யான அனைத்து ராஜதந்திர நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் அரசியல் தலைமைக்குழு தனது அறிக்கையில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.