தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சத்துமாவு என நினைத்து பூச்சி மருந்து குடித்த 3 குழந்தைகள்! அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

29 May 2026, 11:43 pm
சத்துமாவு என நினைத்து பூச்சி மருந்து குடித்த 3 குழந்தைகள்! அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
<p><strong>சத்துமாவு என நினைத்து பூச்சி மருந்து குடித்த 3 குழந்தைகள்! அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை</strong></p><p>கிருஷ்ணகிரி, மே 29- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஆலமரத்துகொட்டாய் பகுதியில், சத்துமாவு என நினைத்து பூச்சி மருந்தைச் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் லட்சுமணன் ஆகியோரின் குடும்பத்தினர், அப்பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். வியாழனன்று மதியம், விளையாடிக்கொண்டிருந்த ஆனந்தின் இரு பெண் குழந்தைகளும் (6, 5 வயது) மற்றும் லட்சுமணனின் மகனும் (9 வயது), வீட்டில் வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தைச் சத்துமாவு எனத் தவறுதலாகச் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் மூவரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதைக் கண்டு பதறிய பெற்றோர், குழந்தைகளை மீட்டு உடனடியாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ஊத்தங்கரை காவல்துறையினரும், வட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.