முந்தய பக்கம்

பாளையங்கோட்டையில் மூன்று நூல்கள் அறிமுகம்

29 Dec 2025, 3:24 pm
பாளையங்கோட்டையில் மூன்று நூல்கள் அறிமுகம்
<p><strong>மக்கள் குறைதீர் கூட்டம் &nbsp; 564 மனுக்களை ஆட்சியர் பெற்றார்</strong></p> <p>தென்காசி, டிச. 29- தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் 564 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உத வித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 564 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்க ளாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்க ளுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறி வுறுத்தினார். முன்னதாக. சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறையின் சார்பில் வீர சிறுவர்கள் தினம் டிசம்பர் 26 - ஐ முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக நடைபெற்ற பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கிராப்ட் ஒர்க் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் &nbsp;வழங்கினார். இக்கூட்டத்தில் , மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram