சென்னையில் மெத்தப்பெட்டமின் 3 பேர் கைது
30 Oct 2026, 11:33 pm
<p><strong>சென்னையில் மெத்தப்பெட்டமின் 3 பேர் கைது</strong></p><p>சென்னை,அக்.30-சென்னையை அடுத்த குரோம்பேட்டை பச்சைமலையில் மெத்தப்பெட்டமின் போதை பொருள் வைத்திருந்ததாக மூன்று பேர்கைது செய்யப்பட்டுள்ளனர், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக, மூன்று பேர் நீண்ட நேரமாக நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு, அவர்களிடம் இருந்து 9 கிராம் மெத்தப்பெட்டமைன், 3 செல்போன்கள் மற்றும் ஒரு லட்சம்ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் தாம்பரம் சானிடோரியத்தை சேர்ந்த ரகு மற்றும் கேரளாவை சேர்ந்த முகமத் ஜியாத், அர்ஷத் என்பது தெரிய</p><p>வந்தது, இவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் போதை பொருள் எங்கிருந்து பெறப்பட்டது, யாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டனர் என்பது குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர்.</p>
