தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்தியப் பொருட்கள் மீது 500% வரி விதிப்போம் என மிரட்டுவதா? ஜன. 22-இல் டிரம்ப்பைக் கண்டித்துப் போராட்டம்!

10 Jan 2026, 2:48 pm
இந்தியப் பொருட்கள் மீது 500% வரி விதிப்போம் என மிரட்டுவதா? ஜன. 22-இல் டிரம்ப்பைக் கண்டித்துப் போராட்டம்!
<p><strong>இந்தியப் பொருட்கள் மீது 500% வரி விதிப்போம் என மிரட்டுவதா?</strong></p> <p>சென்னை, ஜன.10- ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி னால், இந்தியப் பொருட்களின் மீது 500 சதவிகி தம் வரி விதிப்போம் என மிரட்டல் விடுத்தி ருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பைக் கண்டித்து, ஜனவரி 22 அன்று தமிழ்நாட்டின் 10 முக்கியத் தொழில் நகரங்க ளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், ஜனவரி 9 அன்று &nbsp;மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தியக் &nbsp;குழு உறுப்பினர்கள் பி. சம்பத், கே. பால பாரதி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் &nbsp;கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவை கடுமையாகப் பாதிக்கும் அமெ. மசோதா! ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவிகிதம் இறக் &nbsp;குமதி வரி விதிக்கும் மசோதா ஒன்று அமெ ரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இது &nbsp;நிறைவேற்றப்பட்டால் இந்திய ஏற்றுமதிச் சந்தை கடும் பாதிப்புகளை சந்திக்கும். ஏற்கெனவே, இந்தியப் பொருட்களின் மீது &nbsp;16 சதவிகிதம் வரி இருந்த நிலையில் ரஷ்யா &nbsp;கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வ தாக காரணம் காட்டி, டிரம்ப் 50 சதவிகிதம் வரி யும், அபராதமும் சேர்த்து விதித்தார். பிரதமர் &nbsp;மோடி இது குறித்து பேச மறுக்கிறார். இதனி டையே டிரம்ப், செய்தியாளர்களுக்கு அளித்த &nbsp;பேட்டியில் &lsquo;&lsquo;இந்தியா என்னை மகிழ்ச்சியாக &nbsp;வைத்திருப்பது அவசியம், ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய் &nbsp;தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்&rdquo; என்று மிரட்டல் விடுத்தார். சிறு-குறு தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் இந்தியா - அமெரிக்கா இடையேயான ஏற்றுமதி வர்த்தகம் என்பது 86.50 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 7.40 லட் &nbsp;சம் கோடி) என்ற அளவில் தற்போது உள்ளது. &nbsp;இதில் ஆபரணங்கள், மருந்துப் பொருட்கள், &nbsp;மின்சாதனங்கள், துணிநூல் மற்றும் ஜவுளி ஆடைகள், பெட்ரோலிய பொருட்கள், ரசா யனங்கள், இயந்திரங்கள் மற்றும் வாகன &nbsp;உதிரிபாகங்கள், வேளாண் பொருட்கள் மற்றும் ஐ.டி / மென்பொருள் சேவைகள் என &nbsp;பிரதானமாக இந்திய உள்நாட்டு உற்பத்தி யில் 0.02 சதவிகிதம் அமெரிக்காவிற்கு ஏற்று மதி செய்கிறது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள்! மேற்படி துறைகளில் பிரதானமாக சிறு-குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. 500 சதவிகிதம் வரி எனில், அவை மூடப்படும் அபாயம் உள்ளது. லட்சக்கணக்கான தொழி லாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற் &nbsp;பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் பிர தான தொழில் நகரங்களான சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் &nbsp;பாதிப்பை சந்திக்கும். நாடு முழுவதிலுமி ருந்து இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை நம்பி &nbsp;இந்த நகரங்களில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்; அவர்களும் பாதிக்கப்படு வார்கள். ஏற்கெனவே பறிபோன &nbsp;ரூ.12,000 கோடி வர்த்தகம் ஏற்கெனவே, அமெரிக்காவுக்கு அனுப் &nbsp;பப்படும் பிரதான ஏற்றுமதிப் பொருட்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. 2025 ஆகஸ்ட் 27 அன்று இந்த வரி நடைமுறை அமலுக்கு &nbsp;வந்த உடனேயே திருப்பூர் ஏற்றுமதி தொழில் &nbsp;துறை பாதிப்பைச் சந்திக்கத் தொடங்கியது, ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான பின்னலா டைகள் தேக்கம் அடைந்தன. மேலும், இந்த &nbsp;மூன்று மாத காலத்தில் வந்திருக்க வேண்டிய &nbsp;வர்த்தகம் ரூபாய் 12,000 கோடி அளவில் பறி போய்விட்டது. இது, மேலும் பாதிப்பை உரு வாக்கும் என கருதப்படு கிறது. வேறு நாடுகளுக்கு &nbsp;ஏற்றுமதி வர்த்தகம் மாறி விட்டால் மீண்டும் சந்தையை இந்தியாவிற்கு சாதக மாக கொண்டு வருவது கடும் &nbsp;நெருக்கடிகளை உரு வாக்கும். &nbsp;மிகப்பெரிய எண்ணெய் &nbsp;கம்பெனிகளின் தேவைக் காக, அண்மையில் வெனி சுலா நாட்டின் மீதான தாக்கு தல் உள்பட பல்வேறு எண் ணெய் வள நாடுகளின் மீது &nbsp;அமெரிக்கா அத்துமீறி தாக்கி &nbsp;அந்நாட்டின் வளங்களை கைப்பற்றி வருகிறது. &nbsp;அனைத்து மக்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும்! இவ்வாறு உலக போலீஸ் காரனாக நடந்துவரும் அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்தும், ஒன்றிய பாஜக அரசு இந்திய நலனில் அக்கறை கொண்டு இப்போ தாவது வாய் திறக்க &nbsp;வேண்டும்; அமெ ரிக்க அரசோடு பேச்சு வார்த்தை நடத்தி இந்திய நலனை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் &nbsp;ஜனவரி 22-இல் சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், கிருஷ்ணகிரி, விருது நகர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. &nbsp;ஆர்ப்பாட்டத்தில் கட்சி அணிகள் முழுமையாக பங்கேற்க வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம்; அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று ஆதரவு தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்! இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.