தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெற்றோரால் அச்சுறுத்தல்: காதல் தம்பதியினர் ஆட்சியரிடம் புகார்

10 Nov 2025, 2:46 pm
பெற்றோரால் அச்சுறுத்தல்: காதல் தம்பதியினர் ஆட்சியரிடம் புகார்
<p><strong>பெற்றோரால் அச்சுறுத்தல்: காதல் தம்பதியினர் ஆட்சியரிடம் புகார்</strong></p> <p>ஈரோடு, நவ.10- சாதி மறுப்பு திருமணம் செய்த தால், பெற்றோர் கொலை மிரட்டல் &nbsp;விடுப்பதாக காதல் தம்பதியினர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் புகாரளித்தனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில், பவானி அருகே எலவமலை, கரை எல்லப் பாளையம் பகுதியை சேர்ந்த இந்து மதி (19) என்பவர் மனு ஒன்றை அளித்தார். அதில், நானும், தேவா &nbsp;என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் இருவரும் வேறு, வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். நாங்கள் சாதியை மறுத்து காதல் திருமணம் செய்த தால், என்னையும், எனது கணவரை யும் வெட்டி கொலை செய்து விடுவ தாக எனது பெற்றோர் மற்றும் உறவி னர்கள் தொடர்ந்து மிரட்டி வரு கின்றனர். எனவே, எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், எனது &nbsp;பெற்றோர் மற்றும் உறவினர் உள் ளிட்டோரை அழைத்து பேசி, எங் கள் பாதுகாப்புக்கு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அதில் &nbsp;தெரிவிக்கப்பட்டுள்ளது. மயானத்திற்கு சுற்றுச்சுவர் இதேபோன்று, கோபிசெட்டிபா ளையம் அருகே நல்ல கவுண் டன்பாளையம் பகுதியில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் சார் பில் பொதுமக்கள் அளித்த மனு வில், எங்கள் பகுதியில் அரசு புறம் போக்கு சாலையோரம், கடந்த 250 &nbsp;ஆண்டு காலமாக கபர்ஸ்தான் இருந்து வருகிறது. இது கிராம கணக்குகளிலும், பதிவேடுகளிலும் பதிவாகியுள்ளது. இதனிடையே, சாலை விரிவாக்கப் பணிக்காக &nbsp;அதன் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. &nbsp;தற்போது எஞ்சியுள்ள மயான பகுதி யில் சுற்றுச்சுவர் கட்ட ஆவண செய்ய வேண்டும். மேலும், அதை, &nbsp;அரசு (முஸ்லிம்) மயானம் என &nbsp;வகை மாற்றம் செய்ய நடவடிக்கை &nbsp;எடுக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றிடுக ஈரோடு, செல்வம் நகர் வீட்டு &nbsp;உரிமையாளர்கள் மற்றும் குடியி ருப்போர் நலச்சங்கத்தினர் அளித்த &nbsp;மனுவில், செல்வம் நகர் கிழக்கு, மேற்கு பகுதியில் 700க்கும் மேற் பட்ட வீடுகள் உள்ளன. 5 ஆவது வீதி யில் கீழ்பவானி கிளை வாய்க்கால் &nbsp;செல்கிறது. கடந்த, 12 ஆண்டுக ளுக்கு முன்னர், இப்பகுதி வீட்டு மனை கழிவுநீர், பாதாள சாக்கடை &nbsp;திட்டத்தில் இணைத்து, கீழ்பவானி &nbsp;கிளை வாய்கால் வழியாக வெளி யேற்ற திட்டம் வகுத்தனர். அப்பகு தியில் சிலர் ஆக்கிரமித்து, கட்டிடம் &nbsp;கட்டியதால், பாதாள சாக்கடை சேம்பர் தொட்டியில் இருந்து திறந்த &nbsp;வெளி சாக்கடையில் இணைத்துள் ளனர். இதனால் மழை பெய்யும் போது, மழைநீருடன் கழிவுநீரும் சேர்த்து செல்ல வழி இன்றி குடியி ருப்பு பகுதிக்குள் வருகிறது. இது குறித்து, தொடர் முறையீட்டினால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆயி னும், ஆக்கிரமிப்புகளை அகற்றா மல், சீரமைப்புப் பணிகளை மேற் கொள்ளாமல் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு &nbsp;தொடுத்து, நீதிமன்ற உத்தரவு பெற் றும், அப்பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் தயங்குகின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் வெளியேற உரிய நடவடிக்கை மேற்கொள்ள &nbsp;வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. கருவேல மரங்களை அகற்றிடுக ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், வேம்பத்தி ஊராட்சி, தோட்ட குடியாம்பாளையம் பகுதி யில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவி லான ஏரி உள்ளது. அதை முறை யாக பராமரிக்காததால் சீமை கரு வேல மரங்கள் வளர்ந்துள்ளன. அவற்றை அகற்றி, ஏரியை ஆழப் படுத்தி பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டால் அப்பகுதி மக்க ளுக்கு சிறந்த நீராதாரமாக விளங் கும். எனவே, உயர் நீதிமன்ற மதுரை &nbsp;கிளை உத்தரவின்படி, அந்த ஏரி யில் உள்ள சீமை கருவேல மரங் களை அகற்ற உடனடியாக நடவ டிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.