சென்னை விரைவு செய்திகள்
11 Feb 2026, 6:11 pm
<p>‘சென்னை ஒன்’ செயலியில் 50 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை சென்னை,பிப்.11- சென்னையில் பொதுப் போக்குவரத்தை எளிமையாக்கவும், எண்ம மயமாக்கவும் அறிமுகம் செய்யப்பட்ட ‘சென்னை ஒன்’ செயலி, 50 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வரை 30 லட்சமாக இருந்த விற்பனை, பிப்ரவரி இரண்டாம் வாரத்திலேயே 50 லட்சத்தைத் தொட்டுள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாநகரப் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களுக்கான பயணச் சீட்டுகளை இதன் மூலம் எளிதாகப் பெற முடியும். மேலும், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க, ரூ.1000 மற்றும் ரூ.2000 மதிப்பிலான மாதாந்திர பேருந்து அட்டைகளையும் இந்த செயலி மூலமே பெற்றுக்கொள்ளும் வசதி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் இந்த முயற்சிக்குச் சென்னை மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பிப்.17 சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஆட்சியர் மு.பிரதாப் தகவல் திருவள்ளூர், பிப்.11- திருவள்ளூர் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டிற்கு கூடுதல் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது எனவும், உத்தேச ஒதுக்கீடு மற்றும் திட்ட செயலாக்கத்தின்படி ஊராட்சி அளவிலான குழுவின் மூலம் தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்து, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பெயர் பட்டியலை ஒப்புதல் பெறும் பொருட்டு திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் வருகிற செவ்வாயன்று பிப்.17 காலை 11 மணியளவில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி: 2பேர் மரணம் சென்னை, பிப். 11- சென்னை பெரம்பூரில் மனைவியின் புற்றுநோய் பாதிப்பால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக குடும்பத்தி னர் அனைவருக்கும் விஷம் கலந்த கேக் கொடுத்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர் சங்கர மடம் தெருவில் வசித்து வந்த சகாய செபஸ்டின் (43), தனியார் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரெக்சி பியூலா (38) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். பல லட்சங்கள் செலவு செய்தும் நோய் குணமாகாததால், மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப் பணமில்லாததால் சகாய செபஸ்டின் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். மனைவி விரைவில் இறந்துவிடுவார் என்ற கவலை யில், அவர் இல்லாத பட்சத்தில் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் செவ்வாயன்று (பிப். 10) இரவு, “ஹாப்பி பேமிலி டே” என்று எழுதப்பட்ட கேக் ஒன்றை சகாய செபஸ்டின் ஆர்டர் செய்துள்ளார். அதில் கரையானைக் கொல்ல பயன்படுத்தப்படும் விஷத்தைத் தடவி, தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கும் ஊட்டியுள்ளார். அனைவரும் மயக்கமடைந்ததும், அவர்கள் இறந்து விட்டதாக கருதி சகாய செபஸ்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புதன்கிழமை காலை மயக்க தெளிந்த மனைவி பியூலா, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் காவல் துறையினர் சகாய செபஸ்டின் மற்றும் 4 வயது மகன் யுவான் ஆண்டோ ஆகியோர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். உயி ருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மனைவி பியூலா மற்றும் 8 வயது மகள் இவாஞ்சலின் அல்வினா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிறுமி ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்ட தாகவும், பியூலாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.</p>
<p><strong>அறுவை சிகிச்சை செய்த பெண்ணின் வயிற்றில் நூல்</strong></p>
<p>செங்கல்பட்டு, பிப்.11- செங்கல்பட்டில் தனியார் மருத்துவமனையில் 2023-ல் பிரசவ அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் ஒருவருக்கு, சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் சீழ் மற்றும் ரத்தம் கசிந்துள்ளது. சோதனையில், அவர் வயிற்றில் ரத்தக்கட்டியுடன் இரண்டு வெள்ளை நிற நூல்கள் இருப்பது கண்ட றியப்பட்டது. இதனை அகற்ற மீண்டும் அறுவை சிகிச்சை தேவை என மருத்துவர்கள் கூறிய நிலையில், இது குறித்துப் புகார் அளித்த பாதிக்கப் பட்ட பெண்ணிடம் மருத்து வமனை நிர்வாகம் அலட்சிய மாகப் பதிலளித்துள்ளது. இதையடுத்து உரிய நட வடிக்கை கோரி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.</p>
