முந்தய பக்கம்

தோவாளை மலர்ச் சந்தையில் பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு

27 minutes before
தோவாளை மலர்ச் சந்தையில் பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு
<p><strong>தோவாளை மலர்ச் சந்தையில் பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு</strong></p><p>நாகர்கோவில், நவ. 7 -கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் வரத்து குறைந்து, அவற்றின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது.</p><p>தென் தமிழகத்தின் புகழ்பெற்ற பூச்சந்தையான தோவாளைக்கு தினமும் டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும். இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தோட்டங்களில் இருந்து பூக்களைப் பறிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தைக்குப் பூக்களின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.ரூ. 2 ஆயிரத்திற்கு விற்கப்பட்டமல்லிகை, பிச்சிப் பூவரத்து குறைந்ததன் எதிரொலியாக, சனிக்கிழமை (நவ.7) காலை நிலவரப்படி பூக்களின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ மல்லிகைப் பூ, இருமடங்காக உயர்ந்து ரூ.2,000-க்கு விற்பனையானது. 1 கிலோ பிச்சிப் பூ ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram