தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிமனைப் பட்டா கேட்டு சிபிஎம் தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம் ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு நிலங்களை வகைமாற்றம் செய்து பட்டா வழங்கிட

16 Dec 2025, 3:46 pm
குடிமனைப் பட்டா கேட்டு சிபிஎம் தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம் ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு நிலங்களை வகைமாற்றம் செய்து பட்டா வழங்கிட
<p><strong>குடிமனைப் பட்டா கேட்டு சிபிஎம் தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம்&nbsp;ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு நிலங்களை வகைமாற்றம் செய்து பட்டா வழங்கிட&nbsp;தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு</strong></p> <p>சிபிஎம் தலைவர்களிடம் முதலமைச்சர் &nbsp;மு.க. ஸ்டாலின் உறுதி &nbsp;சென்னை, டிச. 16 - தமிழ்நாடு முழுவதும் நிலங்களை வகை மாற் றம் செய்து பட்டா வழங்குவது தொடர்பாக, அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி யளித்துள்ளார். சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதி களில் நீண்ட காலமாக குடியிருக்கும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கிட வேண்டும் என வும், அரசுப் புறம்போக்கு நிலங்கள், அரசு கொடுத்த மாற்று இடத்தில் வீடு கட்டி குடியிருப்ப வர்கள் மற்றும் பயன்பாடற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முத லமைச்சரிடம் மனு அளிக்கும் இயக்கம் டிசம்பர் 16 அன்று நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டி ருந்தது. அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலை மையில், செவ்வாய்க்கிழமையன்று காலை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி மற்றும் சென்னை மாவட்டக்குழு செயலாளர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அண்ணாசாலை அருகே உள்ள சிவானந்தா சாலையில் திரண்டனர். எதிர்பாராத விதமாக மழை பெய்யத் தொடங் கிய நிலையில், மழையையும் பொருட்படுத்தா மல் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். &nbsp;முதலமைச்சரைச் சந்தித்து முறையீடு பின்னர், சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதி மக்களின் சார்பில், &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநில செயலாளர் பெ. சண்முகம், சென்னை மாவட்டச் செயலாளர்கள் எம்.ராமகிருஷ்ணன், ஆர். வேல்முருகன், ஜி. செல்வா, மாநிலக்குழு உறுப்பினர்கள் எல்.சுந்தரராஜன், கே. வனஜாகுமாரி ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பட்டா கோரிக்கை குறித்து, &nbsp;விரிவாக எடுத்துரைத்து முறையிட்டனர். அவற்றை முழுமையாக கேட்டறிந்த முதலமைச்சர், பட்டா பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர்களிடம் உறுதியளித்தார். வகைமாற்றம் செய்து பட்டா வழங்க உறுதி &bull;&nbsp;&nbsp; &nbsp;தமிழ்நாடு முழுவதும் ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் வகை மாற்றம் செய்து பட்டா வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்து ரை செய்திட தலைமைச் செயலாளர் தலைமை யில் உயர்மட்டக்குழு அமைக்கப்படும். &bull; தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடிமனையில் வசிக்கும் மக்களுக்கு விதித்துள்ள வட்டி, அபராத வட்டியை ரத்து &nbsp;செய்து கிரயப்பத்திரம் வழங்கிட வேண்டும், ஏற்கெனவே கிரயப் பத்திரம் பெற்றவர் களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும். ஒன்றிய அரசின் நிலங்கள் கையகம் பற்றி பரிசீலனை &bull;&nbsp;&nbsp; &nbsp;ரயில்வே துறை, பாதுகாப்புத் துறை, வனத் துறை, கண்டோண்ட்மெண்ட் உள்ளிட்ட ஒன்றிய அரசின் பயன்படாத நிலங்களில் குடி யிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கிட வேண் டும்; அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கான கிர யத்தொகையை தமிழக அரசே செலுத்திட வேண்டும்; அல்லது அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கு மாற்றாக வேறு இடத்தை சம்பந்தப்பட்ட துறைக்கு தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டுமென்ற கோரிக்கையும் பரி சீலிக்கப்படும். அரசாணையை திருத்தும் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் &bull;&nbsp;&nbsp; &nbsp;கோவில் மனைகளில் குடியிருக்கும் அடி மனை வாடகைதாரர்களுக்கு அரசாணை மூல மாக கிரயம் செய்து தர உத்தரவிட்டிருப்பது வர வேற்கத்தக்கது; ஆனால், அந்த உத்தரவில் நகர்ப்புற பகுதிகளில் அரசு வழிகாட்டு மதிப்பு அல்லது சந்தை மதிப்பு இதில் எது அதிக மாக இருக்கிறதோ அதில் 225 சதவிகிதம், அதற்கும் அதிகமாக கிரயத் தொகை நிர்ணயி த்திருப்பது ஏற்கத்தக்கதல்ல! 2000-ஆவது ஆண்டிற்கு முந்தைய, அரசு வழிகாட்டி &nbsp;மதிப்பீட்டின் அடிப்படையில் கிரயத்தொகை யை நிர்ணயிக்கும் வகையில் அரசாணை யை திருத்த வேண்டும் என சிபிஎம் தலை வர்கள் விடுத்த கோரிக்கைகளையும் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என முத லமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த போராட்ட நிகழ்வுகளை கட்சியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் &nbsp;எஸ்.கே. மகேந்திரன், க. பீம்ராவ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.