முந்தய பக்கம்

தேனி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை

21 Mar 2026, 2:42 pm
தேனி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
<p><strong>தேனி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை</strong></p> <p>தேனி, மார்ச் 21- தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடை பெற்ற ஈத் பெருநாள் ( ரம லான்) சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். ரமலான் மாதம் தொடங் கியதை அடுத்து கடந்த 30 நாட்களாக முஸ்லிம்கள் நோன்பு இருந்து வந்தனர். அப்போது தினமும் ஐவேளை தொழுகையும் தினந்தோறும் தராவிஹ் தொழுகை நடத்தி வந்தனர். &nbsp;கடைசி 10 நாட்களில் நள்ளி ரவில் கியாமுல் லைல் சிறப்பு &nbsp;தொழுகையையும் நடத்தி &nbsp;வந்தனர். நோன்பு &nbsp;காலங்க ளில், ஜக்காத் என்னும் தான &nbsp;தர்மங்களையும் ஏழை களுக்கு அதிகமாக செய்து வந்தனர். முப்பது நாட்கள் நோன்பு இருந்து முடித்த பின்பு சனிக்கிழமை &nbsp;ரம லான் பண்டிகை கொண்டா டப்பட்டது. கம்பம், பாளையம், கூடலூர், சின்னமனூர், போடி, தேனி, பெரிய குளம், ஆண்டிபட்டி, தேவ தானப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் உள்ளிட்ட &nbsp;20க்கும் மேற்பட்ட பள்ளி வாசல் ஜமாத்தைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்ட னர். தொடர்ந்து ஈத்கா மைதானத்திற்கு ஊர்வல மாக சென்று சிறப்பு தொழு கையில் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram