தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காலமுறை ஊதியம் கோரி சத்துணவு ஊழியர்கள் மாநிலம் தழுவிய மறியல் ஆயிரக்கணக்கானோர் கைது

20 Jan 2026, 2:46 pm
காலமுறை ஊதியம் கோரி சத்துணவு ஊழியர்கள் மாநிலம் தழுவிய மறியல் ஆயிரக்கணக்கானோர் கைது
<p><strong>காலமுறை ஊதியம் கோரி சத்துணவு ஊழியர்கள் மாநிலம் தழுவிய மறியல் ஆயிரக்கணக்கானோர் கைது </strong></p> <p>சென்னை: காலமுறை ஊதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர் கள் செவ்வாயன்று (ஜன.20) மாநிலம் தழுவிய காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். &nbsp;தமிழகம் முழுவதும் ஆட்சியர் அலுவலகங்கள் முன் நடை பெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கா னோரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் நடைபெற்ற மறியலில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.செல்லதுரை, பொதுச் செயலாளர் ஏ.ஜெசி, பொருளாளர் வே.சித்ரா, மாவட்டத் தலைவர் சித்ரகலா, &nbsp;செயலாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பி.செல்லதுரை, &ldquo;திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதி 313-இல் குறிப்பிட்ட படி, சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியராக்கி காலமுறை &nbsp;ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7,850 ரூபாயும், அமைப்பாளருக்கு 5 லட்சம் மற்றும் உதவி யாளருக்கு 3 லட்சம் ரூபாய் பணிக்கொடையும் வழங்க வேண்டும். அரசு பதவிக்காலம் முடியும் நிலையிலும் எமது &nbsp;கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன&rdquo; என்றார். தொடர்ந்து, ஜனவரி 23 வரை மாவட்டத் தலைநகரங்க ளில் மறியலும், ஜன.24 மற்றும் 25 தேதிகளில் ஆட்சியர் அலுவலகங்கள் முன் காத்திருப்புப் போராட்டமும் நடைபெ றும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.