கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டவர்கள் தீ.ஒ.மு. தலையீட்டால் மீட்பு!
26 Mar 2026, 2:46 pm
<p><strong>கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டவர்கள் தீ.ஒ.மு. தலையீட்டால் மீட்பு!</strong></p>
<p>மறுவாழ்வு ஏற்பாடுகளை செய்துதரக் கோரிக்கை சென்னை, மார்ச் 26 - கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு, மறுவாழ்வு ஏற்படுத்தித்தர வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேடகட்டமடுவு ஊராட்சி, பாரிவனம் கிராமத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெரியதம்பி (52), அவரது மனைவி சின்னப்பாப்பா (45), மகன்கள் முரளி, சின்னையா (20) மற்றும் முரளியின் மனைவி வள்ளி யம்மாள் (21) ஆகிய 5 பேர், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள செந்தில் என்பவரது தோட்டத்தில் கடந்த 8 மாதங்களாகக் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வந்துள்ளனர். தோட்டப் பணிகளோடு 250 ஆடுகள் மற்றும் 11 மாடுகளை மேய்க்கும் பணி யில் ஈடுபட்ட இக்குடும்பத்தினர், காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மிகக் குறைந்த கூலியில் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பெல்ட்டால் தாக்குதல் வறுமை காரணமாக ரூ. 5 லட்சம் முன்பணமாக பெற்று, அதில் ரூ. 2 லட்சத்தை திருப்பிச் செலுத்திய பிறகும், இவர்களை விடுவிக்கா மல் உரிமையாளர் செந்தில் மிரட்டி வந்துள்ளார். யாராவது ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் கூட குடும்பத் தினர் அனைவரும் துன்புறுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 13.03.2026 அன்று அதிகாலை, பெரிய தம்பியின் மகன் முரளியை அவரது தாய் மற்றும் மனைவி முன்னி லையிலேயே, உரிமையாளர் செந்தில் பெல்ட்டால் தாக்கி, காலால் உதைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் முரளி பலத்த காயமடைந்தார். இவ்வன்கொடுமையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டிக்கிறது. வழக்குப்பதிவு - கைது காயமடைந்த முரளி, தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தகவலறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் சார்பில் 21.03.2026 அன்று அரூர் வருவாய்க் கோட்டாட்சியரிடம் (RDO) புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அதிகாரிகள் தலையிட்டு, பாதிக்கப் பட்ட முரளியை அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்கு அனு மதித்து, அதன் அடிப்படையில், வாழப்பாடி காவல்துறையானது உரிமையாளர் செந்தில் மீது பிஎன்எஸ் (BNS) மற்றும் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், கொத்தடிமை தொழி லாளர் முறை ஒழிப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் (குற்ற எண்: 124/2026) வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளது. பாதுகாப்பு, மறுவாழ்வு உதவிகள் தேவை! இருப்பினும் இக்குடும்பத்தின ரை வேலைக்கு அழைத்துச் சென்ற புரோக்கர் முருகன் இன்னும் கைது செய்யப்படவில்லை. இவர் தொடர்ந்து இக்குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்து வருவதால், காவல்துறை உடனடியாக கைது செய்து அச்சத்தில் உள்ள இக்குடும்பத்திற்கு உடனடி பாது காப்பு வழங்க வேண்டும். மேலும் கொத்தடிமை ஒழிப்பு சட்டம், 1976-இன் கீழ் பாதிக்கப் பட்டவர்களை அதிகாரப்பூர்வ மாக- கொத்தடிமை முறையால் பாதிக்கப்பட்டவர்கள் (“Bonded Labour Victims”) என அறிவித்து, அரசின் மீட்பு மற்றும் மறுவாழ்வு திட்டங்களின் கீழ் உதவி வழங்கி குடும்பத்தினருக்கு நிவாரணம், வீடு, நிலம், நிலையான வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய மறுவாழ்வு ஏற்பாடுகளை அரசே ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மாநிலத் தலைவர் த.செல்லக் கண்ணு, பொதுச்செயலாளர் பி. சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். முன்னதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் பி. சுகந்தி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன், தீஒமு மாவட்டத் தலை வர் எம். முத்து, செயலாளர் ஏ. சேகர் மற்றும் வேலாயுதம், கே.என். ஏழுமலை, குமரேசன், வீரப்பன், தங்கராஜ், ராமன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். </p>
