தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காந்தியின் படுகொலையை நியாயப்படுத்துவோர் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள் மக்கள் ஒற்றுமை மேடை நூல் அறிமுக விழாவில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. பேச்சு

28 Dec 2025, 5:05 pm
காந்தியின் படுகொலையை நியாயப்படுத்துவோர் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள் மக்கள் ஒற்றுமை மேடை நூல் அறிமுக விழாவில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. பேச்சு
<p><strong>காந்தியின் படுகொலையை நியாயப்படுத்துவோர் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள் மக்கள் ஒற்றுமை மேடை நூல் அறிமுக விழாவில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. பேச்சு</strong></p> <p>திண்டுக்கல், டிச.28- திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் நாடு மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் நூல் அறிமுக விழா மற்றும் நூலாசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாடா ளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சி தானந்தம் நூலாசிரியர்களை கௌரவித்து உரையாற்றினார். திண்டுக்கல் பிச்சாண்டி மண்ட பத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்ட அமைப்பாளரும், சிபிஎம் மாமன்ற உறுப்பினருமான கே.எஸ்.கணேசன் தலைமை வகித்தார். வாமடை பதிப்பகம் சார்பில் வழக்க றிஞர் சுதாகர் ஜெயராமன் வரவேற் றார். சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஏ.அரபுமுகமது, திண்டுக்கல் இலக்கியக் களம் பொருளாளர் முனை வர் க.மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி னர். கவிஞர் இலமு எழுதிய &ldquo;சபிக்கப் பட்டவர்களின் தேசம் &ndash; காசா&rdquo; என்ற நூலுக்கு மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜா.ரோ. ஆனி அபிநயா ஆய்வுரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து நூலாசிரியர் கவிஞர் இலமு ஏற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து &ldquo;மாஞ் சோலை 1349/2 எனும் நான்&rdquo; என்ற &nbsp;நூலுக்கு காந்திகிராம பல்கலைக்கழக ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் &nbsp;ஸ்ரீபாலசுந்தரி ஆய்வுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் நிறைவாக ஆர். சச்சி தானந்தம் எம்.பி. நூலாசிரியர்களுக்கு புத்தகங்களை வழங்கி கௌரவித்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர், இந்தியா போலவே இஸ்ரேலும் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கட்டுப் பாட்டில் இருந்த நாடு. இந்தியா&ndash;பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்தியே காரணம் என வாதிடுபவர்களும், அவ ரது படுகொலையை நியாயப்படுத்து பவர்களும் இன்றும் நாடாளுமன்றத் தில் இருக்கிறார்கள் என சுட்டிக் காட்டினார். இந்தியாவில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே தீராத பகையை உருவாக்கும் வகை யில் பிரிட்டிஷ் அரசாங்கம் &lsquo;பிரித்தா ளும்&rsquo; கொள்கையை நடைமுறைப் படுத்தியது. இந்தியா&ndash;பாகிஸ்தான் &nbsp;பிரிவினையை நாம் ஏற்றுக்கொண்டி ருந்தாலும், இஸ்ரேல்&ndash;பாலஸ்தீன் பிரிவினை ஏற்றுக்கொள்ள முடியாத தாக உள்ளது என்றார். ஒரு காலத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேல் ஆக்கிர மிப்பை தவறு எனக் கூறிய நாடாக வும் இருந்த இந்தியா, இன்று பாலஸ்தீன மக்களை கொல்வதற்கான ஆயுதங்களை சென்னை துறைமுகம் வழியாக அனுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நூலாசிரியர் இலமு பதிவு செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கட்டி டங்களை தாக்குவது போர்க்குற்றம் என்றும், இவ்வகை சர்வதேச விதி முறைகளை இஸ்ரேல் மீறி வருவதாக வும் அவர் குற்றம் சாட்டினார். இன வெறியை தூண்டி போரை எவ்வாறு &nbsp;ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் அர சியல் நலனுக்காக பயன்படுத்து கின்றன என்பதையும் இந்நூல் வெளிப் &nbsp;படுத்துகிறது என்றார். குஜராத் கலவரம் போன்று, காசா வில் நடைபெறும் இனப்படுகொலை யும் மனிதநேய சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதது. &ldquo;எங்கோ நடக்கிறது&rdquo; என்று அலட்சியப்படுத்த முடியாது. இந்த இன அழிப்பு மனப் &nbsp;பான்மை இந்தியாவிலும் துண்டுத் துண்டாக வெளிப்படுகிறது. இதை நாம் &nbsp;அனுமதிக்கிறோமா என்பதே நமது கேள்வி என அவர் வலியுறுத்தினார். இளைஞர்கள் மத்தியில் இந்த &nbsp;நூல் கட்டாயம் கொண்டு செல்லப்பட &nbsp;வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என ஆர்.சச்சி தானந்தம் எம்.பி. தனது உரையை நிறைவு செய்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.