நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றம்
6 Jan 2026, 4:23 pm
<p><strong>நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றம்</strong></p>
<p>ஈரோடு, ஜன.6- நிதி நிறுவனத்தில் முத லீடு செய்தவர்களை ஏமாற் றிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் கண் காணிப்பாளர் அலுவலகத் தில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டனர். மதர்ஸ் அக்ரோஃபார்ம் இந்தியா லிட் என்னும் தஞ்சா வூர் பதிவு அலுவலகத்தைக் கொண்ட நிறு வனத்தின் கிளை சத்தியமங்கலத்தில் செயல் பட்டு வந்தது. இதன் உரிமையாளர் கண்ணன் என்பவராவார். இந்நிறுவனத்தில் சோமசுந்த ரம் என்பவர் உள்ளிட்ட 48 பேர் கடந்த 2012, 13 ஆண்டுகளில் இருந்து மாதம் ரூ.1000, 500, 250 என சிறுசேமிப்பு திட்டத்தில் இணைந்த னர். 72 மாதங்களுக்கு பிறகு ரூ.50 ஆயிரம், 25 ஆயிரம், 12500 என சேர்த்து தருவதாக கூறி யதை நம்பி மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தனர். ஆனால் சொன்னபடி பணம் தரா மல் நிறுவனத்தினர் ஏமாற்றி விட்டனர். எனவே, தங்களுக்கு பணத்தைப் பெற் றுத்தரவும், கண்ணன் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் திங்களன்று முறையிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியன், சத்தி தாலுகா செயலா ளர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
