தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசியலமைப்பைத் தவற விடுபவர்கள் நிச்சயமாக மக்கள் அல்ல! - எம்.ஏ. பேபி

30 Nov 2025, 3:38 pm
அரசியலமைப்பைத் தவற விடுபவர்கள்  நிச்சயமாக மக்கள் அல்ல!  -  எம்.ஏ. பேபி

அரசியலமைப்பைத் தவற விடுபவர்கள்  நிச்சயமாக மக்கள் அல்ல!

ஆளுநர்களின் பங்கு குறித்த இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும், அதைத் தொடர்ந்து 16ஆவது குடியரசுத் தலைவர் பரிந்துரையின் பேரில் உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு வழங்கிய ஆலோச னையும் அரசியலமைப்பின் எழுத்து மற்றும் உணர்வு (spirit) குறித்த விவாதத்தைத் தூண்டி யுள்ளன. அரசியலமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதி வரைவில் இடம்பெற்ற வார்த்தைகள், அந்த உன்னதமான அவையில் நடந்த விவாதங்களின் உணர்வைப் பிரதிபலித்தன. தற்செயலாக, நவம்பர் 26, 1949 அன்றுதான் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  சட்டமன்றத்தில் ஆளுநர்களின் பங்கு குறித்த விவாதம் தரமும் பொருளும் நிறைந்ததாக இருந்தது.  சுதந்திர இந்தியாவில் ஆளுநரின் பதவி, பங்கு மற்றும் அதிகாரங்கள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஒவ்வொரு விவாதத்தின்போதும், பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலையிட்டு, வரைவில் சேர்க்கப்பட்டிருந்த கவனத்துடன் சிந்திக்கப்பட்ட கருத்துகளைத் தெளிவுபடுத்தினார்.  பரிந்துரைக்கப்பட்ட ஆளுநரின் பாரபட்சமற்ற  தன்மை குறித்து உறுப்பினர்கள் சந்தேகங்களை  வெளிப்படுத்தினர். மக்களால் தேர்ந்தெடுக்கப்படா மல், ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருப்பதால், அவர் ‘ரிமோட் கண்ட்ரோல்’ செய்யப்படுபவராக இருப்பார்;  ‘இந்திய அரசு சட்டம், 1935இன் கீழ் இருந்த பழைய மாகாண ஆளுநர்களிடமிருந்து வேறுபட்டவராக இருக்க மாட்டார்’ என்றும் அவர்கள் வாதிட்டனர். பதவியில் இருப்பவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வராக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.  மேலும் ஆளுநராக நியமிக்கப்படுபவர் “வைஸ்ரா யின் பிரதிநிதி போல” ஆகக்கூடும் என்றுஅஞ்சினர்.

ஆளுநர்: முற்றிலும் அரசியலமைப்புக்கு உட்பட்டவர்  அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்படு வதற்கு முன்பு, 1947இலும், பின்னர் 1949இலும் உறுப்பினர்கள் எழுப்பிய இந்த அச்சங்களுக்கு பதிலளித்த டாக்டர் அம்பேத்கர், “நியமிக்கப்பட்ட ஆளுநர் மாநிலத்தின் பிரதிநிதியாக இல்லாமல் ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருப்பார் என்ற அச்சத்தை சில உறுப்பினர்கள் வெளிப் படுத்தியுள்ளனர். ஆளுநர் தனது அமைச்சர்களின் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர்  மைய அரசின்  முகவராக இருக்க விரும்பவில்லை.” மேலும், “அரசியலமைப்பின் கீழ், ஆளுநர் முற்றிலும் அரசியலமைப்புக்கு உட்பட்ட நபர் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூற வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு போட்டி யாக அல்ல, நாடாளுமன்ற அமைப்பைச் செயல்பட வைப்பதற்காகவே அவர் இருக்கிறார்” என்றார்.  அடுத்து நடந்த முக்கிய விவாதம் ஆளுநரின் விருப்புரிமை அதிகாரங்கள் பற்றியது. மீண்டும் ஒருமுறை, விவாதத்தில் பங்கேற்ற பல உறுப்பினர்கள் அத்தகைய விதிகளுக்கு எதிர்ப்பு  தெரிவித்தனர். இவை 1935 சட்டத்தை நினைவூட்டுவ தாக அவர்கள் கூறினர், அதற்கு டாக்டர் அம்பேத்கர் மீண்டும் பதிலளித்தார்: “இந்த விதியின் மூலம் நாம் 1935இன் அம்சங்களை உயிர்ப்பிக்கிறோம் என்று சொல்வது தவறு. அந்த அரசியலமைப்புச் சட்டம் ஆளுநருக்கு ஒரு பொதுவான மீறும் அதிகாரம் (general overriding power) வழங்கியது. நமது அரசியலமைப்புச் சட்டம் அப்படி அல்ல.”

உறுப்பினர்கள் தங்கள் ஆட்சேபனைகளைத் தொடர்ந்ததால் அவர் இன்னும் திட்டவட்டமாக இருந்தார்: “உறுப்பினர்கள் அரசியலமைப்பில் உள்ளதை விட அதிகமாக அதைப் படிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். ஆளுநர் தலையிடும் அதிகாரம் கொண்டவராக இருக்கக்கூடாது. அவரது விருப்புரிமை மிகவும் வரையறுக்கப்பட்ட விருப்புரிமை மட்டுமே.”   ‘வரையறுக்கப்பட்ட விருப்புரிமை’ என்பதன் மூலம், தேர்தல்களுக்குப் பிறகு ஒரு புதிய அரசை அமைப்பதற்கான முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பது அல்லது அரசியலமைப்பில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ள பிற பிரச்சினைகள் போன்ற விஷயங்களை அவர் குறிப்பிட்டார். மிக முக்கியமாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள பல தற்போதைய ஆளுநர்கள் செய்வது போல ‘தலையிடும் அதிகாரியாக’ செயல்படும் ஒரு ஆளுநரை அவர் கற்பனை செய்யவில்லை.  இன்று ஒரு பொருத்தமான விவாதம்  மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்க ஆளுநர்களின் அதிகாரம் குறித்த விவாதம் இன்று மிகவும் பொருத்தமானது.   அன்று அரசியல் நிர்ணய சபையில் மீண்டும், உறுப்பினர்கள் 1935 சட்டத்தைக் குறிப்பிட்டனர். என்.ஜி.ரங்கா தனது கருத்தை சுருக்கமாக வலியுறுத்தினார்: “தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா, நிய மிக்கப்பட்ட ஆளுநரின் தயவில் இருக்கக்கூடாது. இது ஆபத்தானது. இது மற்றொரு போர்வையில் ஆளு நருக்கு விருப்புரிமை அதிகாரத்தை வழங்குகிறது.”

ரோகிணி குமார் சவுத்ரியும் இணைந்தார்: “ஐயா, ஒரு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் ஆளுநரின் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு நேரடியான அவமதிப்பு. இது வைஸ்ராயின் முகவர்களாக இருந்த பிரிட்டிஷ் ஆளுநர்களால் பயன்படுத்தப்பட்ட பழைய அதி காரங்களின் எச்சத்தைத் தவிர வேறில்லை. ஆளுநர் ஒரு தலையிடும் அதிகாரியாக இருக்கக்கூடாது என்று நமக்கு பலமுறை சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அவருக்கு இந்த அதிகாரத்தை வழங்கி னால், அவர் சரியாக அப்படித்தான் ஆகிவிடுவார்.”  உறுப்பினர்கள் வெளிப்படுத்திய அச்சங்களை டாக்டர் அம்பேத்கர் மீண்டும் போக்கினார்: “இந்த அதிகாரத்தின் தன்மை குறித்து சில தவறான  புரிதல்கள் இருப்பதாகத் தெரிகிறது. மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது என்பது ஆளுநர் தனது சொந்த உரிமையில் பயன்படுத்த வேண்டிய விருப்புரிமை அதிகாரம் அல்ல. ஆளுநருக்கு ஒரு பொதுவான மீறும் அதி காரம் வழங்கப்பட்டுள்ளது என்று கருதுவது தவறு.  அவருக்கு அப்படியான எந்த அதிகாரமும் இல்லை... மசோதாக்களை அனுப்புவது ஒரு குறிப்பிட்ட வகை வழக்குகளில் மட்டுமே தேவைப்படுகிறது - அதாவது, மைய அரசின் நிலைக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது அடிப்படை அரசியலமைப்பு விதிகளை மீறும் மசோதாக்கள்.”  அவர் இதை இன்னும் தெளிவுபடுத்தினார்: “சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் தீர்மானிக்கும் நிலையில் இருக்க மாட்டார் என்று நான் அவைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

அவரது செயல்பாடுகள் சடங்கு ரீதியானவை (formal)... அரசியலமைப்புச் சட்டம் அவர் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும் என்று கூறும் இடங்களில், அவர் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும். அவர் தனது விருப்பப்படி செயல்பட வேண்டும் என்று கூறினால் மட்டுமே அவர் அவ்வாறு செய்ய முடியும்... அரசியலமைப்பை முழுமையாகப் படிக்க வேண்டும். வெளிப்படையாக வழங்கப்படாவிட்டால் எந்த விருப்புரிமை அதிகாரத்தையும் ஊகிக்க முடியாது.” ஆளுநர் ஒரு போட்டி அதிகாரியாக மாறுவார் என்ற அச்சத்திற்கு எந்த காரணமும் இல்லை என்று அவர் உறுதியாக மீண்டும் வலியுறுத்தினார்.  டாக்டர் அம்பேத்கரின் கூற்றுப்படி, அரசியலமைப்புத் திட்டத்தில் ஒரு ஆளுநர் அவசர நிலையின் போதும் கூட எந்த சிறப்பு அதிகாரங் களையும் அனுபவிப்பதில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளிலும் ஆளுநர்கள் அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில் தான் செயல்பட வேண்டும். உண்மையில், ஆளுநர்களின் வரை யறுக்கப்பட்ட பங்கு குறித்து அவர் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார்,

அவர் குறிப்பிட்டார்: “ஆளுநரின் அதிகாரங்கள் மிகவும் குறைவாக, பெய ரளவிற்கு, அவரது பதவி மிகவும் அலங்காரமாக இருந்ததால், மிகச் சிலரே அப்பொறுப்புக்கு முன்வருவார்கள் என்று நான் நினைக்கிறேன்.”  ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் மாநில நிர்வாகத்தில் அவரது பங்கு பற்றிய அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் புரிதல் இதுதான் என்று அவர் குறிப்பிட்டார்.  நம் நாட்டின் யதார்த்தங்களுடன் இன்னும் எதிரொலிக்கும் ஒரு அரசியலமைப்பை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வை அவர்களிடம் இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஒரு சில பாரபட்சமான நபர்கள் இவ்வளவு ‘உயர்ந்த’ அரசியலமைப்பு பதவியை ஆக்கிரமிக்கும் ஒரு நாளை அவர்களால் கற்பனை செய்திருக்க முடியாது. மேலும், டாக்டர் அம்பேத்கரின் நம்பிக்கை எவ்வளவு தவறானது என்பதை நிரூபிக்கும் வகையில் அவர்களின் செயல்பாடு உறுதியாக உள்ளது.  இங்கு, குடியரசின் 50ஆவது ஆண்டு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் எழுப்பிய கேள்வியைக் குறிப்பிடுவது பொருத்தமற்றதாக இருக்காது:

“அரசியலமைப்பு நம்மைத் தவறவிட்டதா அல்லது அரசியலமைப்பைத் தவறவிட்டது நாம்தானா என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.”  ‘தீய செயலை’ சரிசெய்தல்  ஆளுநர்களின் பங்கு குறித்த தற்போதைய விவாதத்தில், அரசியலமைப்பைத் தவறவிடுபவர்கள் நிச்சயமாக சம்பந்தப்பட்ட தனி நபர்கள்தான். ஆளுநர்கள் தங்கள் முடிவை ‘முடிந்தவரை விரைவில்’ அறிவிக்க வேண்டும் என்று அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சொற்றொடர் இப்போது மாறாக - ‘முடிந்தவரை தாமதமாக’ என்று விளக்கப்படுகிறது. இன்றைய இந்தியாவின் சூழலில் நீதிமன்றங்கள் தலையிட்டு, அரசியலமைப்பின் உணர்வைச் சரியாக விளக்கி,  அதன் வார்த்தைகளுக்கு அர்த்தமுள்ள விளைவைக்  கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடம் இதுதான். துரதிர்ஷ்டவசமாக, புதிய அரசியலமைப்பின் கீழ் விஷயங்கள் தவறாக நடந்தால், “மனிதன் தீயவன் என்று நாம் சொல்ல வேண்டும்” என்ற டாக்டர் அம்பேத்கரின் கருத்தை நீதிமன்றமும் போதுமான அளவு கருத்தில் கொள்ளவில்லை. அத்தகைய தீய செயல்களைச் சரிசெய்ய நீதிமன்றங்கள் முன்வர வில்லை என்றால், அவை தங்கள் கடமையில் தோல்வியடைகின்றன.  தி இந்து (ஆங்கிலம், 29.11.2025) - தமிழில்: எஸ்.ராமு, அம்பத்தூர்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.