முந்தய பக்கம்

கொண்டாடுபவர்கள் வெட்கப்பட வேண்டும்!

7 Feb 2026, 2:02 pm
கொண்டாடுபவர்கள் வெட்கப்பட வேண்டும்!
<p><strong>கொண்டாடுபவர்கள் வெட்கப்பட வேண்டும்!</strong></p> <p>இந்திய - அமெரிக்க வர்த்தக &nbsp;ஒப்பந்தத்தை கொண்டாடுபவர் கள் உண்மையில் வெட்கப்பட வேண்டும் &nbsp;என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடுமை யாகச் சாடியுள்ளார். &nbsp;&ldquo;இந்தியா - அமெரிக்கா நாடுகளுக் கிடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர் பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்தியப் பொருட்கள் மீது &nbsp;அமெரிக்கா 18% வரிவிதிக்கும் என்றும் &nbsp;அமெரிக்கப் பொருட்கள் குறிப்பாக &nbsp;உணவு மற்றும் வேளாண் &nbsp;பொருட்களுக்கு &nbsp;வரி முற்றிலும் நீக்கப் படும் அல்லது குறைக் கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் பியுஷ் கோயல் தனது &nbsp;பதிவில் சோளம், கோதுமை, சோயா, &nbsp;அரிசி, பால், சில இறைச்சி உள்ளிட்டவற்றை &nbsp;உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளதாகத் தெரி விக்கிறார். ஆனால், கூட்டறிக்கையில் wide range of உணவு மற்றும் வேளாண் &nbsp;பொருட்களுக்கான வரி நீக்கப்படும் அல்லது குறைக்கப்படும் என்றுதான் குறிப்பிட்டுள்ளது. அதேநேரத்தில் ரஷ்ய எண்ணெய்யை &nbsp;வாங்க மாட்டோம் என ஒப்புக்கொண்ட தால்தான் 25% வரியை நீக்குகிறேன், எண்ணெய் வாங்குவது தெரியவந்தால் மீண்டும் வரிவிதிப்பேன் என தனது உத்தரவில் மிரட்டுகிறார் டிரம்ப். இந்தி யாவின் வர்த்தக உறவுகளைத் தீர்மா னிக்கும் அதிகாரத்தை டிரம்புக்கு வழங்கி னாரா பிரதமர் மோடி? இதை &nbsp;இந்தியாவுக்குச் சாதகமான ஒப்பந்தம் எனக் கொண்டாடுபவர்கள் வெட்கப்பட வேண்டும்&rdquo; என கூறியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram