தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘மணிப்பூர் வன்முறைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ குக்கி ‘தேசிய ராணுவம்’ எச்சரிக்கை; பள்ளத்தாக்கில் பதற்றமான சூழல்

22 Mar 2026, 4:19 pm
‘மணிப்பூர் வன்முறைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ குக்கி ‘தேசிய ராணுவம்’ எச்சரிக்கை; பள்ளத்தாக்கில் பதற்றமான சூழல்
<p><strong>&lsquo;மணிப்பூர் வன்முறைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்&rsquo; குக்கி &lsquo;தேசிய ராணுவம்&rsquo; எச்சரிக்கை; பள்ளத்தாக்கில் பதற்றமான சூழல்</strong></p> <p>மணிப்பூர் மணிப்பூரில் நிலவி வரும் வன் முறைப் பதற்றத்துக்கு இடையே அம்மாநில பாஜக முதலமைச்சர் யும்னம் கெம்சந்த் சிங், குக்கி-சோ &nbsp;கவுன்சில் தலைவர்களுடன் சனிக் &nbsp;கிழமையன்று சந்தித்துப் பேசினர். &nbsp;மணிப்பூரில் புதிய அரசு பதவி யேற்ற பிறகு, இரு தரப்பினருக்கும் இடையே நடைபெறும் முதல் நேரடி சந்திப்பு இதுவாகும். &nbsp;அசாம் மாநிலம் கவுகாத்தி யில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில், குக்கி-சோ இனத்த வர் வாழும் பகுதிகளை ஒருங்கி ணைத்து, யூனியன் பிரதேச அந் &nbsp;தஸ்துடன் கூடிய &ldquo;தனி நிர்வாகம்&rdquo; &nbsp;வேண்டும் என்பதில் குக்கி தலை வர்கள் உறுதியான நிலைப்பாட்டை &nbsp;முன்வைத்தனர். இந்த கோரிக்கையோடு கூட் &nbsp;டம் நிறைவடைந்ததாகக் கூறப் &nbsp;படும் நிலையில், மணிப்பூர் வன் முறைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என ஐக்கிய குக்கி தேசிய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக குக்கி ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,&rdquo;மணிப்பூரில் எந்த வொரு மோதலிலும் வன்முறைக் குக் காரணமானவர்கள் தண்டிக் கப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட மக்கள் அரசை நம்புவது கடி னம். அதனால் வன்முறைக்கு தார் &nbsp;மீகப் பொறுப்பு ஏற்பது மிகவும் &nbsp;அவசியம். தார்மீகப் பொறுப்பு &nbsp;என்பது வெறும் தண்டனை மட்டு மல்ல, நடந்த தவறுகளைச் சரி செய்வதற்கான ஒரு உறுதிமொழி யாகவும் பார்க்கப்படுகிறது&rdquo; என அதில் கூறப்பட்டுள்ளது. பாஜகவின் இழிவான அரசிய லால் மணிப்பூரில் குக்கி - மெய்டெய் &nbsp;இடையே வன்முறை சம்பவங்கள் &nbsp;நடைபெற்று வரும் நிலையில், ஐக்கிய குக்கி தேசிய ராணுவத்தின் அறிக்கைக்கு மெய்டெய் சமூகத் &nbsp;தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். இதனால் மணிப்பூரில் சில &nbsp;வாரங்களுக்குப் பிறகு பள்ளத்தாக் கில் மீண்டும் வன்முறை பதற்றம் தீவிரமடைந்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.