தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தில்லி பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்

19 Nov 2025, 3:33 pm
தில்லி பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்
<p><strong>தில்லி பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்</strong></p> <p>ஸ்ரீநகர் தில்லியில் நடந்த கொடூரமான பயங்கர வாதச் செயலில் ஈடுபட்ட கயவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலை வர் முகமது யூசுப் தாரிகாமி கோரியுள்ளார். இது தொடர்பாக எம்.ஒய்.தாரிகாமி கூறி யிருப்பதாவது: &ldquo;நாட்டின் பல்வேறு பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் தொழி லாளர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் சூழல் நிறுத்தப்பட வேண்டும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படிக்கும் இளைய தலைமுறையினரிடையே இந்த நிலைமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் &ldquo;இதில் இழுக்கப்படக்கூடாது&rdquo;, அவர்களை மிரட்டல் அல்லது சந்தேகத்திற்கு ஆளாக்குவதற்குப் &nbsp;பதிலாக அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை நாடு உறுதி செய்ய வேண்டும். இளைஞர்கள் தங்கள் படிப்பையும் பணியையும் தொடர உறுதி, நிலைத்தன்மை மற்றும் நம்பிக்கை தேவைப்படுகிறது. அத்த கைய சூழல் தற்போது இல்லை. இத்தகைய கொடூரமான பயங்கரவாதச் செயல்களுக்குப் பொறுப்பானவர்களுக்கான இடம் சுருங்க வேண்டும் என்றாலும், அப்பாவி குடிமக்கள் துயரத்திலும் அவமானத்திலும் உணரக்கூடாது என்பதை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இளைஞர்களின் இதயங்களையும் மனதையும் வெல்லும் முயற்சிகள் அவசியம். அப்பாவி மக்களைக் கொடுமைப்படுத்துவது ஒருபோதும் உதவாது. விரக்தி எப்போதும் எதிர் விளைவை ஏற்படுத்தும். தில்லி பயங்கரவாதச் சம்பவத்தைத் தொ டர்ந்து கண்மூடித்தனமான கைதுகள் எதுவும் இருக்கக் கூடாது. மாணவர்கள், தொழிலா ளர்கள் அல்லது சாதாரண குடிமக்கள் என அப்பாவி மக்கள் அச்சத்திற்கோ அல்லது சந்தே கத்திற்கோ ஆளாகாமல் இருப்பதை சட்ட அம லாக்க அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.&rdquo; இவ்வாறு அவர் கூறியுள்ளார். (ந.நி.)</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.