தொப்பூர் கணவாயில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
15 Jun 2026, 12:30 am
<p><strong>தொப்பூர் கணவாயில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்</strong></p><p>தருமபுரி, ஜூன் 14- தொப்பூர் கணவாயில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடை பெற்று வருவதால், சாலையை அக லப்படுத்தி, இரண்டு வழித்தடங்க ளாக வாகனங்கள் செல்ல நடவ டிக்கை மேற்கொள்ள ஆட்சியர் சர வணன் அறிவுறுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில், தொடர் விபத்துகளை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் உயர்மட்ட பாலம் அமைக் கும் பணிகள் நடைபெற்று வருகின் றன. இப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் சனியன்று ஆய்வு செய்தார். தொடர் சாலை விபத்துகளை தவிர்க்கும் வகை யில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், உயர் மட்ட பாலம் தொடங்கும் இடம், கட்டமேடு, ஆஞ்சநேயர் கோவில், சிறிய சுரங்கப்பாதை அமைவிடம், விபத்துகள் அதிகம் நிகழும் இரட் டைப்பாலம், எலிவேட்டட் காரிடா ரின் முடிவு உள்ளிட்ட இடங்களை யும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண் டார். மேலும், உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளால் பொதுமக் களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி, கனரக வாகனங் கள் ஒரு வழியாகவும், இலகுரக வாகனங்கள் ஒரு வழியாகவும் செல்வதற்கு உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ள அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார். பாலம் அமைக்கும் பணிகள் குறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அறியும் வகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவ டிக்கைகள் மேற்கொள்ள வேண் டும், பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அறியும் வகை யில், 50 மீட்டர் இடைவெளியில் ஒளி ரும் வில்லைகள், விளம்பர பதா கைகளை கூடுதலாக அமைக்க வும் உத்தரவிட்டார். தொப்பூர் கண வாய் பகுதி முதல் இரட்டைப் பாலம் வரை தேவையான அளவு மையத் தடுப்பு இடைவெளி அளவை குறைத்து போக்குவரத்திற்கு ஏற்ற வாறு சாலையை அகலப்படுத்தி, இரண்டு வழித்தடங்களாக வாக னங்கள் செல்ல நடவடிக்கை மேற் கொள்ள அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, தொப்பூர் சுங்கச்சா வடி அருகிலுள்ள திட்ட இயக்குநர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சேலம் திட்ட செயலாக்க அலகு திட்ட இயக்கு நர் சீனிவாசலு, மாவட்ட வன அலு வலர் ராஜங்கம், துணை காவல் கண்காணிப்பாளர் சிவராமன், வரு வாய் கோட்டாட்சியர் காயத்ரி, வட்டார போக்குவரத்து அலுவலர் சி.க.ஜெயதேவ்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
