தொப்பூரில் கணவாயில் அடுத்தடுத்து விபத்து உயர்மட்ட பாலம் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
14 Jun 2026, 1:40 am
<p><strong>தொப்பூரில் கணவாயில் அடுத்தடுத்து விபத்து உயர்மட்ட பாலம் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்</strong></p><p>தருமபுரி, ஜூன் 13- தொப்பூர் கணவாய் பகுதியில் வெள்ளியன்று இரவு அடுத்தடுத்து வாகனங்கள் விபத்தில் சிக்கி 4 பேர் படுகாயமடைந்த நிலையில், உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டி கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், தொப்பூர் கண வாய் பகுதியில் சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில், ரூ.775 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, 3 ஆண்டு காலத்திற்குள் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. அதன்படி, தொப்பூர் கணவாய் மலைப்பகுதி சாலை 6 வழிச் சாலையாக அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. தற்போதுள்ள தொப் பூர் கணவாய் சாலையின் ஏற்ற, இறக்கங்கள் வெகுவாக குறைக்கப் பட்டு, போக்குவரத்துக்கு ஏற்ற வகை யில் மேம்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் காரணமாக, ஆங்காங்கே குழி தோண்டப்பட்டு கட்டு மானப் பொருட்கள் கொட்டப்பட்டு பணி கள் நடைபெற்று வருகின்றன. இதனால் வாகனங்கள் ஒரு வழிச்சாலையில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், தருமபுரி பகுதியில் இருந்து பாரம் ஏற்றிய லாரி ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டி ருந்தது. தொப்பூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே வெள்ளியன்று இரவு வரும்பொழுது, கட்டுப்பாட்டை இழந்த லாரி தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ் சாலையில் தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து, தடுப்புச்சுவரை தாண்டி சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சா லைக்கு சென்று, அவ்வழியாக வந்து கொண்டிருந்த 2 கார், கன்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து மோதி விபத்துக் குள்ளானது. இவ்விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், மற்றொரு வரின் கால் இடிபாடுகளில் மாட்டிக் கொண்டது. இந்த விபத்து குறித்து தகவ லறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற் றும் சுங்கச்சாவடி பணியாளர்கள் படுகா யம் அடைந்த நபர்களையும் மற்றும் இடர்பாடுகளில் சிக்கித் தவித்த நபரை யும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு விபத்தில் சிக்கிய வாக னங்களை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தினால் சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கடு மையான போக்குவரத்து பாதிப்பு ஏற் பட்டது. இவ்விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். விபத்து களை தடுப்பதற்காக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.</p>
