தொப்பலாக்கரை முத்தம்மன் கோவிலில் வழிபாட்டு உரிமை: மாதர் சங்கம் நடத்திய ஆவேசப் போராட்டம் கே.பாலபாரதி, அ.ராதிகா உட்பட பெண்கள் அராஜகமாகக் கைது!
1 hour before

தொப்பலாக்கரை முத்தம்மன் கோவிலில் வழிபாட்டு உரிமை: மாதர் சங்கம் நடத்திய ஆவேசப் போராட்டம்

கே.பாலபாரதி, அ.ராதிகா உட்பட பெண்கள் அராஜகமாகக் கைது!

திருச்சுழி, ஜூலை 1 - விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டத்திற்குட்பட்ட தொப்பலாக்கரை கிரா மத்தில் உள்ள ஸ்ரீ இறங்கி முத்தம்மன் கோவிலில் அனைத்து சமூக மக்களும் பொங்கல் வைத்து வழிபட உரிமை கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் புதனன்று பெருந்திரள் உரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.ராதிகா, முன்னாள் எம்.எல்.ஏ கே.பாலபாரதி உள்ளிட்ட 76 பெண்கள் உள்பட 138 பேரை காவல்துறை யினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அராஜகமான முறையில் கைது செய்தனர்.

தீண்டாமைச் சுவரான ஒலிபெருக்கி

அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் நீண்ட காலமாக அனைத்து சமூகத்தினரும் வழிபட்டு வந்தனர். ஆனால், சமீபகால மாக அறக்கட்டளை (டிரஸ்ட்) என்ற பெயரில் சிலர் கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட சமூக மக்க ளை மட்டும் உள்ளே வரவிடாமல் பாரபட்ச மாக ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும், கோவிலில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை அமைத்து, “இக்கோவில் 6 சமுதாய மக்களுக்கு மட்டுமே பாத்தி யப்பட்டது” என ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வசனம் ஒலிக்கச் செய்து புதிய தீண்டாமையைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். இதுகுறித்து மாதர் சங்கம் புகார் அளித்ததன் பேரில், அந்த ஒலிபெருக்கிகளை அகற்ற வட்டாட்சியர் உத்தரவிட்டும் காவல்துறையினர் அதனை அகற்றாமல் அலட்சியம் காட்டி வந்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் அதி காரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

போலீசாரின் மிரட்டலும் அராஜகக் கைதும்

இதையடுத்து, கோவிலில் பொங்கல் வைத்துத் திருவிழா நடத்தும் உரிமையை பெற மாதர் சங்கம் களத்தில் இறங்கியது. மாவட்டச் செயலாளர் என்.உமா மகேஸ்வரி தலைமையில் நடை பெற்ற இப்போராட்டத்தில், சட்டப்படி யான நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையினர், அமைதியாகப் போரா டியவர்களை “வழக்கு போடுவோம்” என மிரட்டினர். இதற்குப் போராட்டக்காரர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது, மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.ராதிகாவை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து வாகனத்தில் ஏற்றி அராஜகம் செய்தனர்.

அதேபோல், போராட்டத்தில் பங்கேற்க வந்த மாதர் சங்க மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பால பாரதியை, கமுதி சாலையிலேயே துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான பெரும் படையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

தொடரும் அவலம்: கே.பாலபாரதி சாடல்

கைதின் போது காவல்துறையினரிடம் ஆவேசமாகப் பேசிய கே.பாலபாரதி, “பலமுறை மனு அளித்தும் கோரிக்கை நிறைவேறாததால்தான் பொது மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். இப்பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய வருவாய்த்துறையினர் ஏன் பேச்சு வார்த்தை நடத்த மறுக்கிறார்கள்? கடந்த ஆட்சியில் நீடித்த இந்த சாதியப் பாரபட்சம், தற்போது புதியதாக வந்துள்ள ஆட்சி யிலும் தொடர்கிறது. விருதுநகர் மாவட்டக் காவல்துறை தீண்டாமைப் புகார்களில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கத் தொடர்ந்து தவறி வருகிறது. அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கோவிலில் அனைவரும் சாமி கும்பிட அனுமதிக்கும் வரை எங்களின் போராட்டங்கள் ஓயாது” என்று எச்சரித்தார்.

இப்போராட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி, மாதர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.லட்சுமி, மாவட்டப் பொருளாளர் வி.ராஜேஸ்வரி மற்றும் சிபிஎம் திருச்சுழி வட்டச் செயலாளர் மார்க்கண்டன் உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர். கைது செய்யப்பட்ட 76 பெண்கள் உள்ளிட்ட 138 பேரும் மண்டபசாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.