100 நாள் வேலை திட்டத்தை உடனே தொடங்கக் கோரி பெண்கள் முற்றுகை
1 Jun 2026, 10:59 pm
<p><strong>100 நாள் வேலை திட்டத்தை உடனே தொடங்கக் கோரி பெண்கள் முற்றுகை</strong></p><p>தூத்துக்குடி, ஜூன் 1- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உடனடியாக வேலை வழங்கக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நூற்றுக் கும் மேற்பட்ட கிராமப்புறப் பெண்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் த்தின் மாவட்டச் செயலாளர் புவி ராஜ் தலைமையில், எப்போதும் வென்றான், கணக்கன்கட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மையே பிரதான தொழி லாக உள்ள நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரக வேலை உறுதித் திட்ட வேலை கள் எதுவும் நடைபெறாததால் கிராம மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் வாழ்வாதாரத் தைக் காக்க உடனே வேலை வழங்கிட வேண்டும் என்ற பெண்க ளின் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர், இது குறித்துத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.</p>
