வேடநத்தம் சிறுமி பாலியல் வன்கொலை வழக்கு குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை! தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
25 May 2026, 8:42 pm

வேடநத்தம் சிறுமி பாலியல் வன்கொலை வழக்கு குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை!

தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தூத்துக்குடி, மே 25 - விளாத்திகுளத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வர னுக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை விதித்து, தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, கடந்த மார்ச் 10 அன்று வீட்டருகே உள்ள காட்டுப்பகுதிக்கு இயற்கை உபாதைக் காகச் சென்றவர், மறுபடியும் வீடு திரும்ப வில்லை. இந்நிலையில் கடந்த மார்ச் 11 அன்று சிறுமி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பி னர், கிராமமக்கள் இச்சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளியை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10-க்கும் மேற்பட்ட தனிப்படை விசாரணை

துரித நடவடிக்கையில் இறங்கிய தமிழக அரசு, அலட்சியமாக செயல்பட்ட மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனா வை, மார்ச் 12 அன்று சஸ்பெண்ட் செய்தது. நெல்லை சரக டிஐஜி, தூத்துக்குடி எஸ்.பி மற்றும் ஏ.டி.எஸ்.பி.க்கள் டிஎஸ்பி-க்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணையில் இறங்கினர்.

இதில், வேடநத்தம் அருகிலுள்ள காற்றாலை கோபுர சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து, தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரைக் கைது செய்தனர்.

ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி கைது

காவல்துறையினர் நடத்திய விசாரணை யில், குற்றவாளி தர்ம முனீஸ்வரன், ஏற்கெனவே மூதாட்டி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்தவர் என்பது தெரியவந்தது.

அண்மையில் ஜாமீனில் வெளியில் வந்திருந்த நிலையில்தான், மீண்டும் பள்ளி மாணவியைக் குறிவைத்து இத்த கைய கொடூரக் குற்றச் சம்பவத்தில் அவர் ஈடுபட்டுள்ளார் என்பதை காவல்துறை யினர் ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபித்தனர்.

20 நாட்களில் குற்றப்பத்திரிகை

நீதிமன்ற உத்தரவுப்படி தர்ம முனீஸ்வ ரன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடை பெற்றது. இதில் காவல்துறையின் சார்பில் நீதிமன்றத்தில் 20 நாட்களில் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணைக்காக தர்ம முனீஸ்வரனை 3 முறை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு குறித்து 73 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை அனைத் தும் மே 21 அன்று நிறைவடைந்தது.

அதைத்தொடர்ந்து, திங்கட்கிழமை (மே 25) அன்று தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார். நீதிபதி தீர்ப்பை வழங்கும் முன்பு குற்ற வாளி தர்ம முனீஸ்வரனிடம் அவரது குடும்பம் குறித்தும் அவர் தற்போது யாருடன் வசித்து வருகிறார்; அவரது வருமானம் குறித்தும் கேட்டார்.

குறைந்தபட்ச தண்டனைக்கு சட்டத்தில் இடமில்லை!

நீதிபதியின் கேள்விக்குப் பதிலளித்த குற்றவாளி தர்ம முனீஸ்வரன், தற்போது தனது தாயுடன் வசித்து வருவதாகவும் தின மும் 600 ரூபாய் ஊதியம் வருவதாகவும் தனக்கு உடலில் எந்த நோயும் இல்லை என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தீர்ப்பை வழங்கிய நீதிபதி, “உங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என உங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர். அரசுத் தரப்பில் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கூறினர். உங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குவதற்கான எந்த சாத்தியமும் இல்லை. நீங்கள் ஏற்கெனவே இதே போன்று ஒரு பெண்ணை கொலை செய்து அந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது வெளியே வந்துள்ளீர்கள்.

குழந்தை என்று கூட பார்க்காத கொடூரம்

ஆனால், திருந்தாமல் மேலும் இது போன்று பாலியல் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளீர்கள். உங்களுக்கும் இந்த வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அதை யும் நினைக்காமல் இந்த குழந்தையை மிகவும் கொடூரமாக கொலை செய்தது மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக உங்க ளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படு கிறது. பிஎன்எஸ் சட்டம் 124-இன்படி ஒரு தூக்குத் தண்டனையும் மற்றும் போக்சோ சட்டப் பிரிவு 6-இன் கீழ் ஒரு தூக்குத் தண்டனை யும் என இரண்டு தூக்கு தண்டனைகளும், உடலில் பலத்த காயம் ஏற்படுத்தியதற்கு ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கப்படு கிறது” என்று தீர்ப்பளித்தார். இதையடுத்து, குற்றவாளி தர்ம முனீஸ் வரனை பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

சம்பவம் நடந்து 77 நாட்களில் குற்ற வாளிக்கு இரண்டு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு இருப்பது குறிப் பிடத்தக்கது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக எல்லம்மாள் கிஸிங்கர் வாதாடினார்.