புதிய தேசிய சாதனையைப் படைத்த தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம்
9 Mar 2026, 4:24 pm
<p><strong>புதிய தேசிய சாதனையைப் படைத்த தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் </strong></p>
<p>தூத்துக்குடி ,மார்ச் 9 இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே கப்பலில் இருந்து 147 காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரி பாகங்களை கையாண்டு தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் வர லாற்றுச் சாதனை நிகழ்த்தி யுள்ளது. இதற்கு முன்பு, கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி ஒரே கப்பலில் 103 காற்றாலை இறகுகளைக் கை யாண்டதே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாத னையை வ.உ.சி துறைமுகம் முறியடித்துள்ளது. சீனாவின் ‘சின்சோ’ (Qinzhou) துறைமுகத்தி லிருந்து ‘எம்.வி. போ ரன் ஜியூ சோ’என்ற கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட, தலா 76 மீட்டர் நீளமுள்ள இந்த 147 இறகுகளும் மார்ச் 8ஆம் தேதி வெற்றிகரமாக இறக்கி முடிக்கப்பட்டன. இந்த நிதியாண்டில் பிப்ரவரி 2026 வரை வ.உ.சி துறைமுகம் மொத்தம் 4,211 காற்றாலை இறகுகளைக் கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் (2,395 இறகு கள்) ஒப்பிடுகையில் 75.82% வளர்ச்சியாகும்.காற்றாலை இறகுகளைக் கையாளு வதில் இந்தியாவின் முன்னணி துறைமுகமாகத் திகழும் வ.உ.சி துறைமுகம், தனது உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்தி வருகிறது. துறைமுகத்தின் உட்பகுதியில் 60,000 சதுர மீட்டர் கூடுதல் சேமி ப்பு இடம் உருவாக் கப்பட்டுள்ளது. வெளிப்புறத் தில் மேலும் 1,80,000 சதுர மீட்டர் பரப்பளவு சேமிப்பு வசதிக்காக ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்தச் சாதனையை சாத்தியமாக்கிய இறக்குமதி யாளர்கள் மற்றும் முகவர்க ளுக்கு வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தனது வாழ்த்துக் களைத் தெரிவித்தார். ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடியின் ‘Maritime Amrit Kaal Vision 2047’ திட்டத்தின்படி, சுற்றுச்சூழ லுக்கு உகந்த கடல்சார் துறையை உருவாக்க இத்துறைமுகம் உறுதியுடன் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.</p>
