தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குறைந்தபட்ச ஊதியம் வழங்கிடுக குடிநீர் விநியோகம்-சம்பள முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக!

19 Aug 2026, 10:00 pm
குறைந்தபட்ச ஊதியம் வழங்கிடுக குடிநீர் விநியோகம்-சம்பள முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக!

குறைந்தபட்ச ஊதியம் வழங்கிடுக குடிநீர் விநியோகம்-சம்பள முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக!

தூத்துக்குடி,ஆக.19- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்தகுறைந்தபட்ச ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும். சம்பள முறைகேடுகளை தடுத்து தொழிலாளர்களின் சட்ட உரிமைகளை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் தூத்துக்குடியில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.தூத்துக்குடி மில்லர்புரம் 2 ஆவது தெருவில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்புக் கோட்டநிர்வாகப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மணவாளன்தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து, சங்க நிர்வாகி முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சங்கத் தலைவர் மணவாளன் கூறியதாவது:தமிழ்நாடு முழுவதும் சுமார் 540 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 22 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களில் ஏராளமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.13,053 வழங்கப்பட வேண்டும். ஆனால், பல தொழிலாளர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், தொழிலாளர்களுக்கான சம்பளம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படாமல் கையில்வழங்கப்படுகிறது. இதனால் சம்பள வழங்கலில் முறைகேடுகள் நடைபெறுகிறது. இபிஎப்மற்றும் இஎஸ்ஐ தொகைகளும்முறையாக செலுத்தப்படுவதில்லை .

ஒரு திட்டத்தில் சுமார் 300 தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டியநிலையில், 175 பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். ஆனால் 300 தொழிலாளர்களுக்கான தொகைஒப்பந்தத்தின் அடிப்படையில் பெறப்பட்டு வருகிறது. . இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்படும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .

குடிநீர் விநியோகத்திலும் முறைகேடு ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு பம்பிங் நிலையங்கள் மூலம் மஞ்சள்நீர்காயல் உள்ளிட்டபகுதிகளுக்கு, பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் குடிநீர் அனுப்பப்படுகிறது. அனுப்பப்படும் தண்ணீரின் அளவுக்கும் சென்றடையும் தண்ணீரின் அளவுக்கும் பெரிய வித்தியாசம் இருந்து வருகிறது.குழாய்களில் ஏற்படும் கசிவுகாரணமாக அதிகளவில் தண்ணீர் வீணாகி வருகிறது, இதனால் பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீர் பாதிக்கப்படுகிறது.

திருச்செந்தூர் சாலை பகுதியில் செல்லும் பெரிய குடிநீர் குழாய்களில் தண்ணீர் கசிந்து வீணாகும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது,இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவில்லை .இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடமும், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநரிட

மும் முறையிட்டும் இதுவரை உரியநடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம், இபிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சட்டப்பூர்வ உரிமைகளைமுழுமையாக வழங்க வேண்டும். சம்பள மற்றும் குடிநீர் விநியோக முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி,தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.