தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த எதிர்ப்பு தூத்துக்குடியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

26 May 2026, 10:06 pm
கோடை விடுமுறையில்  சிறப்பு வகுப்புகள் நடத்த எதிர்ப்பு தூத்துக்குடியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த எதிர்ப்பு தூத்துக்குடியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தூத்துக்குடி,மே 26- தூத்துக்குடி மாவட்டத் தில் கோடை விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்த வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டதைக் கண்டி த்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNPGTA) சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க் கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாய்மொழி உத்தரவை உடனடியாக ரத்து செய்து ஆசிரியர்களின் விடுமுறை உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியு றுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாநில துணைத் தலைவர் முஜிபுர் தலைமை வகித்தார். மாநில அமை ப்புச்செயலாளர் முத்தை யா, மாவட்ட அமைப்பு செயலாளர் பன்னீர்செல் வம், மாவட்ட செயலா ளர் மாரிச்செல்வம் ஆகி யோர் பேசினர். மாவட்ட பொருளாளர் சுப்பிரமணி யன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.