தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம்! தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்பு

25 minutes before
டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம்! தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்பு

டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம்!

தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி, நவ.27 -தூத்துக்குடி மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் மற்றும் பேரிலோவன்பட்டி காசநோய் பிரிவு சார்பில், விளாத்திகுளம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் (MDU ACF) மூலம் தீவிர காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமிற்கு முன்னதாக, காசநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு முகாமை விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவர் அயன்ராஜ் மற்றும் துணைத் தலைவர் வேல்ச்சாமி ஆகியோர் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்குக் காசநோய் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பேரூராட்சிச் செயல் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

நடமாடும் மருத்துவக் குழுவினர், பேரிலோவன்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குட்பட்ட அனைத்து MLHP மற்றும் WHV பணியாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.