தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூத்துக்குடியில் தமுஎகசவின் பாரதி விழா

28 Oct 2026, 8:35 pm
தூத்துக்குடியில் தமுஎகசவின் பாரதி விழா

தூத்துக்குடியில் தமுஎகசவின் பாரதி விழா

தூத்துக்குடி, அக்.28-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் , மகாகவி பாரதிநினைவு தினப் பரிசளிப்பு விழா மற்றும் ஆசிரியர், பேராசிரியர் விருது விழா தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள புனித மரியன்னை ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

கலை மற்றும் இலக்கியத் துறைகளில் சிறப்பாகச் செயல்பட்ட 15 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 15 கல்லூரிப் பேராசிரியர்கள் என மொத்தம் 30 கல்வியாளர்களுக்கு பாரதி ஆசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும், தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கவிதை, கதை, கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற 300 மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் இளம் பாரதி விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில், பாரதி ஆசிரியர் விருது பெற்றஆசிரியர்கள் பாரதி ஓவியக் கண்காட்சியையும் பாரதி கட்டுரைகளையும் திறந்து வைத்தனர். முத்துச்சிப்பிதாமோதரன் மற்றும் கீழக்கரந்தை ராஜலட்சுமி ஆகியோரின் நாட்டுப்புறப்பாடல்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில், தமுஎகச மாவட்டத் துணைத்தலைவர் பேராசிரியர் சங்கரலிங்கம் சிறப்புரையாற்றினார்.

விழாவுக்கு தமுஎகச மாவட்டத் தலைவர் மரு. சிவநாகரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் முனைவர் செ. சுரேஷ்பாண்டி, தூத்துக்குடி மாநகர் செயலாளர் ஆர்.விக்னேஷ்வரன், இளஞ்சிறார் நீதிமன்ற நீதிக்குழு உறுப்பினர் சித்திரம்ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.