தூத்துக்குடி மாவட்ட டாம்கோ கடன் இலக்கு ரூ.4 கோடி டாம்கோ தலைவர் தகவல்
25 Sept 2026, 10:01 pm

தூத்துக்குடி மாவட்ட டாம்கோ கடன் இலக்கு ரூ.4 கோடி டாம்கோ தலைவர் தகவல்

தூத்துக்குடி, செப்.25-தூத்துக்குடி மாவட்டத்திற்கான டாம்கோ கடன் இலக்கு ரூ. 4 கோடி அளவுக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று டாம்கோ தலைவர் தமீம் அன்சாரி சாகிப் தெரிவித்தார்.தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு கடன் உதவிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர்அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.இக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட டாம்கோ தலைவர் தமீம் அன்சாரி சாகிப், சிறுபான்மையினர் பிரதிநிதிகளுடன் ஆலோசனைமேற்கொண்டார்.

ஆலோசனைக் கூட்டத்தில் டாம்கோ தலைவர் தமீம் அன்சாரி சாகிப் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கான டாம்கோ கடன் இலக்கு ரூ. 50லட்சத்திலிருந்து ரூ. 1 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதனை ரூ. 4 கோடி அளவுக்கு உயர்த்தநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு ரூ. 36 லட்சம் வரை கல்விக் கடன் ஒதுக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் வீதம் 6 ஆண்டுகளுக்கு இக் கடனைப் பெறலாம். இதற்கான ரூ. 18 லட்சம் பிணைத் தொகையில் பாதியை அரசே ஏற்றுக்கொள்கிறது.

முஸ்லிம்களுக்கு கடன் வழங்க ரூ. 100 கோடி முஸ்லிம்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்க ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது இன்னும் சில மாதங்களில் நடைமுறைக்கு வரும். இதுவரை 2 நபர்கள் ஜாமீனில் ரூ. 1 லட்சம் வரை கடன் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 2 ஜாமீன்களுடன் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 3 லட்சம் வரை கல்விக் கடன் மற்றும் தனிநபர்கடன் பெற முடியும்.டாம்கோ திட்டங்கள் குறித்த தகவல்களைப் பொதுமக்கள் போன் மூலமாகவே நேரடியாக அறியும் வகையில், புதிய செல்போன் ‘செயலி’ ஒன்றைவிரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகப்படுத்த உள்ளார் என்று தெரிவித்தார்.இந் நிகழ்வில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நல அலுவலர் (பொறுப்பு) பிர்தௌஸ் பாத்திமா, கண்காணிப்பாளர்கள் லட்சுமி, கலைச்செல்வன், இஸ்லாமியச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.