தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூத்துக்குடி மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்த மாணவி வனிதா ராணி

20 May 2026, 10:12 pm
தூத்துக்குடி மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்த மாணவி வனிதா ராணி

தூத்துக்குடி மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்த மாணவி வனிதா ராணி

தூத்துக்குடி, மே 20- தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் கிராமத்தைச் சேர்ந்த பொன் மாடசாமி இந்திய ராணுவத்தில் தில்லியில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியினரின் மகள் வனிதா ராணி ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பிரசன்னா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் புதனன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று, தூத்துக்குடி மாவட்ட அளவில் மூன்றாம் இடமும், ஓட்டப்பிடாரம் வட்டார அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து மாணவி வனிதா ராணி கூறுகையில், இந்த வெற்றி எனக்கு மட்டும் சார்ந்தது கிடையாது. என்னுடைய பள்ளியைச் சார்ந்தது.

என்னுடைய ஆசிரியர்கள், பள்ளி முதல்வர், பெற்றோர் ஆகியோர் ஊக்கம் காரணமாக இந்த அளவுக்கு வந்துள்ளேன்.

ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. அதை போல் 12-ஆம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பெறுவதற்கு முயற்சி செய்வேன்.

என்னுடைய கனவு பெரிய டாக்டராக வேண்டும், அதையும் நிறைவேற்ற முயற்சி செய்வேன் என்று தெரிவித்தார்

. அதேபோல் பள்ளி அளவில் மாணவி சுவேதா 494 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், மாணவர்கள் கவின்ராம் மற்றும் பிரதாப் சிவமுத்து ஆகிய மாணவர்கள் 492 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர்.

சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.