தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு!

25 May 2026, 1:52 pm
தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை  தூக்கு!

தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு போக்ஸோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி, கடந்த மார்ச் 9ஆம் தேதி வீட்டின் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற நிலையில் காணாமல் போனார். தொடர்ந்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் குளத்தூர் போலீஸார் வழக்குப்பதிந்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மார்ச் 11ஆம் தேதி மாணவி சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையின் போது கிடைத்த சிசிடிவி காட்சி பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில், தூத்துக்குடி ராஜபாண்டி நகரைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் குளத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். தொடர்ந்து பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, கடந்த மே 21ஆம் தேதி வழக்கின் விசாரணை நிறைவடைந்தது.

இவ்வழக்கில் இன்று (மே 25) தீர்ப்பு வழங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை அமர்வில் தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டதில், இரண்டு பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் நடைபெற்ற 77 நாட்களுக்குள் விசாரணை நிறைவு பெற்று தண்டனை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.