தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கி சூட்டின் எட்டாம் ஆண்டு சிபிஎம் அலுவலகத்தில் நினைவஞ்சலி

22 May 2026, 9:10 pm
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கி சூட்டின் எட்டாம் ஆண்டு சிபிஎம் அலுவலகத்தில் நினைவஞ்சலி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கி சூட்டின் எட்டாம் ஆண்டு சிபிஎம் அலுவலகத்தில் நினைவஞ்சலி

தூத்துக்குடி, மே 22- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி யில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாய மடைந்து மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில் பலியான 15 பேரின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாசிலாமணி புரத்தில் உள்ள சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 15 பேரின் திருவுருவப் படங்களும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. இதற்கு மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநி லக்குழு உறுப்பினர் பூமயில் , மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.அர்ச்சுனன், ஆர்.ரசல், பேச்சிமுத்து, ராஜா, தூத்துக்குடி மாநகர் செயலாளர் எம்.எஸ்.முத்து, ஒன்றியச் செயலாளர் கே.சங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதே போல் வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கீதா ஜீவன் கலைஞர் அரங்கில் இறந்தவர்களின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.