தூத்துக்குடி போலீஸ் எஸ்பி பெயரில் போலி முகநூல் பக்கம் தொடங்கி பண மோசடி முயற்சி காவல்துறை எச்சரிக்கை
7 May 2026, 9:38 pm

தூத்துக்குடி போலீஸ் எஸ்பி பெயரில் போலி முகநூல் பக்கம் தொடங்கி பண மோசடி முயற்சி காவல்துறை எச்சரிக்கை

தூத்துக்குடி,மே 7- தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பெயரில் போலி முகநூல் கணக்கைத் தொடங்கி, மர்ம நபர்கள் சிலர் பண மோசடியில் ஈடுபட்டு வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் பெயர் மற்றும் புகைப் படத்தைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் போலி முகநூல் (Facebook) பக்கத்தை உருவாக்கியுள்ள னர். இந்தத் திரிக்கப்பட்ட பக்கத்தின் மூலம் பொது மக்களிடம் பண உதவி கேட்டும், பல்வேறு மோசடி வேலைகளில் ஈடுபட்டும் வருவது காவல்துறையி னரின் கண்காணிப்பில் தெரியவந்தது. காவல்துறை உயர் அதிகாரியின் பெயரிலேயே மோசடி நடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். இது குறித்து தூத்துக் குடி மாவட்ட காவல்துறை தரப்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில், “காவல்துறை அதிகாரிகள் யாரும் முகநூல் அல்லது சமூக வலைதளங்கள் வாயி லாகப் பொதுமக்களிடம் பணம் கேட்கமாட்டார்கள். அதிகாரிகளின் பெயரில் வரும் பணக் கோரிக்கைக ளையோ அல்லது மிரட்டல்க ளையோ பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். தெரியாத நபர்க ளுக்கோ அல்லது சந்தே கத்திற்குரிய கணக்குக ளுக்கோ பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம். சமூக வலைதளங்களைப் பயன் படுத்தும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் “ என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.