தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர் சுடலைமணிக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி ; சொந்த ஊரில் உடல் தகனம்

27 Jun 2026, 11:18 pm
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர் சுடலைமணிக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி ; சொந்த ஊரில் உடல் தகனம்
<p><strong>தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர் சுடலைமணிக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி ; சொந்த ஊரில் உடல் தகனம்</strong></p><p>​​​​​​​தூத்துக்குடி, ஜுன் 27- தூத்துக்குடி மாவட்டம் மேலக் கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் சுடலைமணி (31), அசாம் ரைஃபிள்ஸ் பிரிவில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி பேச்சியம்மாள். இவர் களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையை முடித்து மீண்டும் பணிக்காக அசாம் சென்றிருந்த சுடலைமணி, அசாம் மாநில எல்லைப் பகுதியில் சக வீரர்களுடன் வாகனத்தில் சென்ற போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குண்டு பாய்ந்து வீர மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ராணுவ வாகனத்தில் சொந்த ஊரான மேலக்கூட்டுடன்காடு கிரா மத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது மனைவி, குடும்பத் தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தூத்துக்குடி கட லோர காவல் படை கமாண்டர் ஆதர்ஷ் பால் மற்றும் உதவி கமாண் டர் அமன் சிங் தலைமையில் கட லோர காவல் படையினர் தேசியக் கொடியை அவரது உடலின் மீது போர்த்தி, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்-எம்.பி. அஞ்சலி செலுத்தினர் பின்னர் தமிழக மீன்வளம் -மீனவர் நலத்துறை அமைச்சர் ஶ்ரீநாத், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, திருச்செந் தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன், தூத்துக் குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி வட்டாட் சியர் திருமணி ஸ்டாலின், ரூரல் டிஎஸ்பி சுதிர், உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரி வித்தனர். அதனைத் தொடர்ந்து ராணுவ வீரர் சுடலைமணியின் உடல் ஊர்வ லமாக எடுத்துச் செல்லப்பட்டு இடு காட்டில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. மேலும், சுடலைமணியின் உடலின் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை அதிகாரிகள் அவரது மனைவியிடம் வழங்கினர். வீரமர ணம் அடைந்த ராணுவ வீரர் சுடலை மணியின் மறைவு மேலக்கூட்டுடன் காடு கிராமம் மட்டுமின்றி, சுற்று வட்டார பகுதிகளிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது தியாகத்திற்கு பொது மக்கள் மற்றும் பல்வேறு தரப்பின ரும் வீர வணக்கம் செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.