தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கல்விக் கட்டணக் கொள்ளையை தடுத்திடுக! மாவட்ட ஆட்சியரிடம் மாணவர் சங்கம் மனு

8 Jun 2026, 9:57 pm
கல்விக் கட்டணக் கொள்ளையை தடுத்திடுக! மாவட்ட ஆட்சியரிடம் மாணவர் சங்கம் மனு
<p><strong>கல்விக் கட்டணக் கொள்ளையை தடுத்திடுக! மாவட்ட ஆட்சியரிடம் மாணவர் சங்கம் மனு</strong></p><p>தூத்துக்குடி, ஜூன் 8 - 2026–2027 ஆம் கல்வியாண்டுக்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மீறி அதிக தொகை வசூலிக்கப்படுவதாகக் கூறி, இந்திய மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், “தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தியபடி, தனியார் பள்ளிகள் தாங்கள் வசூலிக்கும் கல்விக் கட்டண விவ ரங்களை பள்ளி வளாக அறிவிப்புப் பலகை களில் பெற்றோர்கள் தெளிவாக அறியும் வகையில் வெளியிட வேண்டும் என்ற கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இந்த உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தாமல் புறக்கணித்து வருவதாகவும், அரசு நிர்ணயித்த கட்ட ணத்தை விட அதிகமாக வசூலிப்பதை மறைப்பதற்காகவே இந்த விவரங்களை வெளிப்படுத்தவில்லை என்றும் மாண வர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், கல்வி என்பது சேவையாக இருக்க வேண்டிய நிலையில், சில கல்வி நிறுவ னங்கள் அதை லாப நோக்க வணிகமாக மாற்றி வருவதாக பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் தலைமை யில் தனி ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து, மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது. அத்துடன், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி கூடுதல் தொகை வசூ லிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது சட்டரீதி யாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராம் குமார் தலைமையில், மாநகரச் செயலாளர் சாம், வஉசி கிளைச் செயலாளர் வெற்றி, நிர்வாகி பிரான்சிஸ் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த கோரிக்கை, புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.