தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மே 10 வரை 144 தடை உத்தரவு அமல்

7 May 2026, 9:39 pm
தூத்துக்குடி மாவட்டத்தில் மே 10 வரை  144 தடை உத்தரவு அமல்

தூத்துக்குடி மாவட்டத்தில் மே 10 வரை 144 தடை உத்தரவு அமல்

தூத்துக்குடி, மே 7- தூத்துக்குடி மாவட்டத் தில் மே 7-ஆம் தேதி மாலை 6 மணி முதல் மே 10-ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியி்ட்டுள்ள அறிவிப்பில், “தூத்துக்குடி மாவட்டம் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் 08.05.2026 மற்றும் 09.05.2026 அன்று ஸ்ரீவீரசக்க தேவி உற்சவ விழா நடைபெறவுள்ளது. அசம்பாவிதங்கள் ஏது மின்றி விழா அமைதியாக நடைபெறும் பொருட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திட 07.05.2026 மாலை 6 மணி முதல் 10.05.2026 காலை 6 மணி வரை பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா (BNSS) - 2023, பிரிவு 163 (1) -ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்த ரவு பிறப்பித்து உத்தர விடப்பட்டுள்ளது. அதன்படி பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், ஐந்து மற்றும் அதற்கு மேற் பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், அன்னதானம் வழங்குவ தற்கும், கலந்து கொள்ளும் பொதுமக்கள் அனைவரும் வாள், சுருள் கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயு தங்கள் கொண்டு வருவ தற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வரப்படு வதற்கும் பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா (BNSS) - 2023, பிரிவு 163 (1) -ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை உத்தரவிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியா வசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாக னங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகிய வற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங் கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்த விருப்பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ள வும் கேட்டுக்கொள்ளப்படு கிறது என்று தெரிவித்துள் ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.