முந்தய பக்கம்

மாநில கபாடி போட்டியில் தூத்துக்குடி பள்ளி வெண்கலம் வென்றது

18 Feb 2026, 3:04 pm
மாநில கபாடி போட்டியில் தூத்துக்குடி பள்ளி வெண்கலம் வென்றது
<p><strong>மாநில கபாடி போட்டியில் தூத்துக்குடி பள்ளி வெண்கலம் வென்றது</strong></p> <p>&nbsp;தூத்துக்குடி,பிப்.17- தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக ஐந்தாவது மாநில அளவிலான குடியரசு தின போட்டிகள் ராணிப் பேட்டை மாவட்டத்தில் &nbsp;நடைபெற்றது. இப்போட்டியில் 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான சாம்பி யன்ஷிப் கபாடி போட்டியில் தஸ்நேவிஸ் மாதா பெண்கள் &nbsp;மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றனர். &nbsp;தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரலாற்றில் 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் முதன்முதலாக மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து வரலாற்று சாதனை புரிந்துள்ளனர். பள்ளி மாணவிகளுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியை &nbsp;சில்வா பெர்னாந்த், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ண தாசன், பள்ளி மாணவிகள் ஆகியோரை பள்ளித் தாளாளர் பெர்னதெத் மேரி, பள்ளித் தலைமை ஆசிரியை சகாய ஹேமலதா ஜெயந்தி, பள்ளி ஆசிரியைகள் அலுவலக பணியாளர்கள் அனைவரும் &nbsp;வாழ்த்திப் பாராட்டினர். &nbsp; &nbsp; &nbsp;</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram